உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை சீர்பெற்று வாழ்ந்த திராவிடம், இன்று அச் சீரி ழந்து சிதைந்து கிடக்கின்றது! உலகின் முன் தலை நிமிர்ந்து நின்ற திராவிட நாகரிகம், இன்று இருக்கு மிடம் தெரி யாமல் மறைந்து கிடக்கின்றது! எழில் வாய்ந்த திராவி டத்தின் இன்ப வாழ்வு, கனவு கண்ட கதைபோல் ஆகிவிட்டது! இந்த மாறுதலுக்குக் காரணமென்ன? 'மக்கள் சிந் தனை யிழந்ததே' என்றாலும், அச் சிந்தனையை மக்கள் இழக்கும்படியான ஓர் நிர்ப்பந்தம் - கொடுங்கோன்மை, நாட்டில் தா தாண்டவமாடியது என்பதை யாரும் மறுத்து விடமுடியாது. அதனால்தான், நினைக்க முடியாத இந்தத் திடீர் மாறுதலுக்குத், திராவிடம் ஆளாகிவிட்டது! எனினும், இன்றைய திராவிடநாட்டு அறிஞர் கடமை என்ன? திராவிடத்தின் கீர்த்தியில்-திராவிட நாகரிகத்தில், கவலையற்று இருக்கப் போகின்றனரா? இல்லையெனின், செய்யவேண்டிய கடமையாது? "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’* என்பது குறள். நோயாளியின் நோயை யறிந்து, அந் நோய் உண்டானதற்குக் காரணத்தையு மறிந்து, அதற் கேற்ற மருந்து கொடுத்தால்தான் நோய் குணமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/5&oldid=1732750" இலிருந்து மீள்விக்கப்பட்டது