உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய பாதை 49 மனிதனது தேவைகள் மிகவே, அவன் தன் ஒருவனு டைய அறிவு ஆற்றலைக்கொண்டு, அவை யெல்லாவற்றை யும் அடைவது என்பது முடியாததாயிற்று. அந்த நிலையில், பிறரோடு கூடி, அவற்றைப் பெற்றுத், தேவையான அள வைத் தனித்தனியே பகிர்ந்து எடுத்துக்கொள்ளும் முறை யைக் கைக்கொண்டான். அறிவு வளர்ச்சி ஏற்பட்டு, நாகரிக வாழ்வை மனிதன் நடத்தத் தொடங்கிய காலத்தில், தேவை கள் மிகவும் பெருகிக்காணப்பட்டன. அப்போது கைத்திற னும் வாய்த்திறனும் கொண்டவர்கள், கண்மூடி மக்களது பொருளையெல்லாம் கொத்திக்கொண்டு ஏப்பமிடத் தொடங் கினர். தன்னுடைய சக்திக்கு மீறிய உழைப்புப் பிறரிடத்தில் இருக்கவே, அந்த உழைப்பினைக் கொண்டு அவர்கள் திரட் டிய பொருளைத் தான் அடையப், பண்ட மாற்று முதலிய முறைகளை ஏற்படுத்தித் தேவையானவற்றைச் சேர்த்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது தன் வாழ்க் கைக்குப் பயன்படுத்தத் தொடங்கினான். முதலில் தனக்கு வேண்டிய உணவு உடை உறையுள்போன்ற பொருள்களைத் தேவையானபொழுது பெற்றுக்கொண்டு வந்த மனிதன் நாளடைவில் தேவையான பொருள்களைத் திரட்டி வைத் துக்கொண்டு உரிமை பாராட்டத் தொடங்கினான். இதனால், ஒருவன் ஆதிக்கத்தில் அமையும் பொருள், அவனுக்கு உரிமையுடையதாகும் என்ற நிலைமை ஏற்பட்டது. ஒருவன் தனக்குரிய பொருளைப் பிறர்க்குரிய தொரு - ஆனால் தனக் குத் தேவையான -பொருளுக்கு ஈடாகக்கொடுத்து மாற்றிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டபோது, மனிதனின் உரிமை கள் மாற்றிக்கொள்ளகூடிய தன்மைகளுடையனவாயின. பல .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/50&oldid=1732824" இலிருந்து மீள்விக்கப்பட்டது