உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 களைத் வ பொருளாதாரம் ஆன உரிமைகள் மாற்றிக் கொள்ளக்கூடியனவாக பொழுது, உழைப்போரிடம் பொருள் தங்குவதில்லையா யிற்று. மக்களில் கைத்திறனும் வாய்த்திறனும் கொண்ட வர்கள், மற்றவரின் உழைப்பினால் உருவாகும் பொருள் தமதாக்கிக்கொண்டு, உல்லாசவாழ்வு வாழத் தொடங்கினர். ஏதும் அறியாக் கண்மூடி மக்கள், உழைப்பி னால் கிடைத்த பொருளைப் பிறர்க்குக் கொடுத்து விட்டு, அறிய வாழ்வு வாழலாயினர். இப்படியாகப் பொருளாதாரத் துறையில், பணக்காரன் - ஏழை என்ற இரு பிரிவினர் ஏற் பட்டனர். பிறரது உழைப்பினையே விலைக்கு வாங்கிக்கொள் ளம் வாய்ப்புக்கொண்ட பணக்காரன், முதலாளியானான். உழைப்பினைக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு வாழும் நிலை யிலிருப்போர், தொழிலாளிகளாயினர். பொருளாதாரம் காரணமாக ஏற்பட்டிருக்கும் பணக்காரன்-ஏழை, முத லாளி-தொழிலாளி, பிரபு-பஞ்சை போன்ற பிரிவுகள் நிலைத் திருக்கும்படியாகவே, இன்றைய சமுதாயச்சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன உழைக்க ஒரு பிரிவினரும், பிறர் உழைப்பினை உறிஞ்சி வாழ வேறோர் பிரிவினரும் வாழும்படியாகவே, இன்றைய சமுதாய நீதி தீட்டப்பட்டிருக்கிறது. ஒரு பணக்காரனுக்கு ஒருவன் பிள்ளையாய்ப் பிறந்து விடுவதன் காரணமாகவே, அவனுடைய சொத்துக்கெல்லாம் இவன் உரிமை யுடையவன் என்ற சட்டமும், சமுதாயத்தில் இன்று நின்று நிலவுகிறது. ஆகவேதான், மக்கள் எல் லோரும் மக்களாகவே வாழவேண்டுமானால், பகுத்தறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/51&oldid=1732851" இலிருந்து மீள்விக்கப்பட்டது