36 புதிய பாதை 51 நீதிக்குப் புறம்பானதாக விளங்கும் தனிச் சொத்துரிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று, அறிஞர்பலர் கூறு கின்றனர். போது , மக்களெல்லோரும் உழைக்கும் படியான நிலையை, சமுதாயமும் அரசியலும், இன்னமும் பலநாடுகளில் வற் புறுத்தவில்லை. உழைப்பாளிகளின் உழைப்பால் உரு வாகும் பொருள்கள், உழைக்காதவர்களுக்குப் போய்ச் சேருகிறது. உற்பத்திப்பொருள் பரப்பப்படும் அப்பொருளுக்கு உண்மையாகவே உரிமையுடையவனிடம், அது தேவையான அளவுகூடப் போய்ச் சேருவதில்லை. உழைக்காதவர்களுக்குத், தேவைப்பட்ட அளவுக்கு மேல் சென்று குவிகிறது. சமுதாயத்தில் இத்தகைய பொருளா வினியோகமுறை இருப்பதால்தான், இரு வேறு பிரிவுகள் உண்டாகின்றன. ஒன்று வாழுகிறது; மற் றொன்று வாடி வதங்குகிறது! ஒன்று தேவைக்குமேற் பட்டதைக் கொண்டிருக்க உரிமை கொண்டாடுகிறது; மற் றொன்று உள்ளதையும் கொடுத்து விட்டு உழலுகின்றது! ஒன்று ஆணவ ஆதிக்கவெறி கொள்கிறது; மற்றொன்று அடிமை நிலை ஏற்கிறது! தார ய ஒரு பொருளுக்கு விலை குறிக்கப்படுகின்றது என் றால், அதனை உண்டாக்குவதற்குச் செலவழிக்கப்பட்ட உழைப்பிற்குக் குறிக்கப்படும் விலையே அதுவாகும். உழைப்பின் விலையே பொருளின் விலை. உலகிற்கு விலை கொடுக்கப்படுகின்றது என்றால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உழைப்பாளர் சமூகம் கொடுத்த உழைப்
பக்கம்:புதிய பாதை 1948.pdf/52
Appearance