52
பொருளாதாரம்
பிற்குக் கொடுக்கப்படும் விலை அது என்பது பொருள். கடலினடியில் முத்துக் கிடக்கும் வரையில், அதற்கு விலை கிடையாது. ஒரு தொழிலாளி கடலுக்குள் சென்று, அதனை எடுத்துக் கொண்டு வெளியே வந்து கொடுக்கும் போதுதான், ௮து விலை போகிறது. கடலுக்குள் இருக்கும் வரையிலும் விலையில்லாத முத்து, வெளியே கொண்டு வந்த பிறகு விலை பெறுகிறது. ஆகவே, முத்துக்குக் கொடுக்கப்படும் விலை, அந்த முத்தினை எடுக்கச் செலவழித்த உழைப்பிற்குக் கொடுக்கப்படும் விலையாகும். அதே போல, காட்டின் நடுவில் மரம் வளர்ந்து நிற்கும் போது, நாட்டிலிருப்போர் ஒரு சிறு காசு கூடக் கொடுத்து, விலைக்கு வாங்க மாட்டார்கள். தொழிலாளி கல்லையும், முள்ளையும் கடந்து காட்டிற்குள் சென்று, உழைப்பினைக் கொடுத்து, மரத்தை வெட்டிக் கொண்டு வந்து, மீண்டும் உழைப்பினைக் கொடுத்து, ௮தனை மேஜையாகச் செய்து முடித்துக் கொண்டு வந்து நிறுத்தும் போது, ௮து விலை போகிறது. காட்டில் விலை போகாத மரம், இப்பொழுது விலை போகிறது. ஆகவே, மேஜைக்குக் கொடுக்கப்படும் விலை, அதனை ஆக்குவதற்குச் செலவழித்த உழைப்புக்குக் கொடுக்கப்படும் விலையாகும். எனவேதான், உலகம் உழைப்போர்க்குச் சொந்தம் என்று சொல்லப்படுகிறது, இன்று, உழைப்போர்க்கு உலகம் சொந்தமில்லை. அந்த நிலையில்தான் சமுதாய, அரசியல், பொருளாதாரக் கட்டுத் திட்டங்கள், பழைய காலந் தொட்டு வகுக்கப்பட்டுக் கையாளப்பட்டு வருகின்றன. அந்தக் கட்டுத்திட்டங்களை உடைத்-