புதிய பாதை 53 தெறிந்து, 'உலகம் உழைப்போர்க்குச் சொந்தமாகும்' என்ற நிலையை உண்டாக்குவதே, புதிய பாதையை உண்டாக்குவ தாகும். உழைப்பு எல்லோருக்கும் சரிசமமான ரீதியில், பகுத் தறிவு நீதியின் அடிப்படையில் அமைக்கப்படவேண்டும். பகுத்தறிவு நீதிப்படி, ஐந்து திட்டங்கள், மக்களைப் பொரு ளாதார இன்ப வாழ்வு வாழும்படி செய்யும். அவையாவன:- 1. எல்லோருக்கும் பொதுச்சொத்துரிமை வழங்குவது. 2. பொது உழைப்பினைக்கொண்டு பொது உற்பத்தி. 3. உற்பத்தியைப் பொதுவாக வினியோ கித்தல். 4. பொது லாப உரிமை அடையச் செய்தல். 5. உழைப்போர் ஆட்சி ஏற்படுத்துதல். இந்தத் திட்டங்கள் எப்பொழுது நடைமுறையில் கொண்டுவரப்படுகின்றனவோ, அப்பொழுதுதான் புது உலக வாழ்விற்கான புதியபாதை ஏற்பட்டதாக அமையும். அந்தப் புதிய பாதையை அமைக்கப், பொருளாதாரப் புரட்சி, மேற்கண்ட முறையில் ஏற்படவேண்டும். அப் புரட்சியை நடத்த, உலகெங்கும் வீரர்கள் தோன்ற வேண்டும்.
பக்கம்:புதிய பாதை 1948.pdf/54
Appearance