54 7. நமது குறிக்கோள் 'திராவிட நாடு திராவிடர்க்கே' என்ற உரிமை முழக் கம், திராவிடக் கழகத்தின் முதன்மையான குறிக்கோளாகக் கொள்ளப்பட்டுவருகின்றது. தமிழகத்தின் பல பாகங் களில், இனவெழுச்சி கொண்ட இளைஞர்களின் இதய கீத மாக, இம் முழக்கம் இன்று ஒலிக்கப் பெறுகின்றது. தமிழ் வழங்கும் தமிழகம், தெலுங்கு வழங்கும் ஆந் திரம், கன்னடம் வழங்கும் கன்னடம், மலையாளம் வழங்கும் கேரளம் இவை நான்கும் சேர்ந்த நிலப்பகுதியைத் திரா விடம் என்று நாம் அழைக்கிறோம். நாம் மட்டும் அப்படி அழைக்க வில்லை ; உலக வரலாற்றுப் பேராசிரியர்கள் பலரும், மொழிநூல் வல்லுநர் பலரும் அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். வரலாறும் அறிஞர்களும் அப்படி அழைப்பதனால் தான், நாமும் திராவிடம் என்று அழைக்கிறோம். திராவிட நாடு திராவிடர்க்கே என்ற முழக்கத்தின் பொருளாக நாம் கொள்வது, தமிழகம், ஆந்திரம், கன்னடம், கோளம் ஆகிய நான்கு பகுதிகளும், மொழி வழியே தனித்தனி ஆட்சிகளாகப் பிரிந்து, பொருளாதார வழியே ஒன்று சேர்ந்த திராவிடக் கூட்டாட்சியாக அமைவது என்பதாகும். தமிழகத்திலே தமிழராட்சியும், ஆந்திரத்திலே ஆந்திரராட்சியும், கன்னடத்திலே கன்னட ராட்சியும், கேரளத்திலே கோளராட்சியும் அமைந்து, அவை நான்கும் சேர்ந்த கூட்டாட்சியாக உடன் அமைவது,
பக்கம்:புதிய பாதை 1948.pdf/55
Appearance