புதிய பாதை ட 55 பாதுகாப்பு, பொருளாதாரக் கூட்டுறவு, அரசியல் மேம் பாடு, வாழ்க்கை யுயர்வு ஆகிய துறைகளிலே சிறந்து விளங்குதற்கு ஏதுவாகும். இந்த நான்கு பகுதிகளும் மொழிவழியே பிரிந்து காணப்பட்டாலும், ஒன்றற் கொன்று தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு தன்மை வாய்த் தனவே. மொழிகளுங்கூட ஒரு மொழியிலிருந்தே கிளைத் தெழுந்தனவாதலால், ஒர் இன மொழிகளாகும். ஆகவே தான், இந்நான்கு மொழிகளும் திராவிட இனத்தைச் சேர்ந்தனவாகும் என்று, மொழி நூல் வல்லுநர் கூறுகின் றனர். பண்பு, பழக்க வழக்கம், கோட்பாடு, நாகரிகம் ஆகிய வற்றில், ஒன்றிற் கொன்று ஒத்தே விளங்கக் காண்கிறோம். வட இந்தியப் பகுதியோடு ஒவ்பிடுங்கால், இவை நான்கும் வேறுபட்டு விளங்குவதைக் காணலாம். ஏன் இவற்றைக் கூறுகிறோமென்றால், திராவிடப்பகுதிகள் நான்கும் ஒன்று சேர்ந்து வாழக்கூடியன; வாழமுடியும்; வாழ்ந்தால் நல் லது. இவை நான்கும் தனித்தனியாகவோ ஒன்றுபட்டோ. வட இந்தியப்பகுதியோடு சேர்ந்து வாழமுடியாது; ஆகவே கூடாது; நல்லதுமல்ல. திராவிடப் பகுதிகள் நான்கும், வட இந்தியாவைப் போலவே, இருநூறு ஆண்டுகளாக வெள்ளைக்காரருக்கு அடிமைப்பட்டிருந்தன. ஆகவே தான், வடநாடும் தென் னாடும் ஒன்று சேர்ந்து, வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்ட வேண்டிய இன்றியமையா நிலை ஏற்பட்டது; ஒன்று சேர்ந்து நின்றன. அதுபோலவே, பொருளாதாரத் துறையிலே, திராவிடத்தை வடநாடு அடிமைப் படுத்திச் சுரண்டி வரு
பக்கம்:புதிய பாதை 1948.pdf/56
Appearance