56 நமது குறிக்கோள் கிறது. அந்தச்சுரண்டலைத் தவிர்க்க, சுரண்டப்படும் நான்கு பகுதிகளும் ஒன்றுசேரவேண்டிய அவசியம் ஏற் படுகிறது. இந்த அவசியத்தை உணர்ந்துதான், திராவிடப் பகுதிகள் நான்கையும் ஒன்று சேர்த்து ஐக்கிய முன்னணி ஏற்படித, தராவிடக்கழகம் முனைந்துள்ளது. உலகம், பல்வேறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிந்திருந்தால்தான் வாழமுடியும் என்று, அவை கருதுகின் றன. உலகம் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்று அவை யாவும் எண்ணினாலும், ஒன்றாக இருக்க முடியவில்லை! இந்தியத் துணைக்கண்டம் போன்ற நிலப்பரப்புக் கொண்ட ரஷ்யா நீங்கின ஐரோப்பா, இன்று முப்பது நாடுகளுக்கு மேல் துண்டாக்கப்பட்டுத் தனித்தனி ஆட்சி கொண்டவை யாக விளங்கக் காண்கிறோம். அவையெல்லாம் ஒன்றாக இருக்கக் கூடாதா?. இருக்கக்கூடாது என்பதல்ல; ஒன்றாக இருக்கமுடியவில்லை! இந்தியத் துணைக்கண்டம் ஒன்றாக இருக்கக்கூடாதா? என்று கேட்கப்படுகிறது. ஒன்றாக இருக்கக்கூடாதென்பதல்ல; ஒன்றாக இருக்க முடியவில்லை. ஆகவே, பாகிஸ்தான் பகுதியில் வாழும் பெரும்பகுதி மக் கள், இந்தியாவோடு சேர்ந்து வாழமுடியவில்லை என்ற கார ணத்தைக் காட்டித், தனிநாடு பெற்றனர். அதுபோலவே, திராவிடத்தைச் சேர்ந்த மக்கள் தனிநாடு பிரித்து வாழ வேண்டும் என்ற உணர்வு, திராவிடத்தைச் சேர்ந்த நான்கு பகுதி மக்களுக்கும் ஏற்படவேண்டும் என்று திராவிடர் கழ கம் உணர்த்துவது, வடநாட்டோடு சேர்ந்து வாழக் கூடாது என்பதற்காக அல்ல; வாழமுடியவில்லை என்பதற்காகும்.
பக்கம்:புதிய பாதை 1948.pdf/57
Appearance