புதிய பாதை 57 இந்தியத் துணைக்கண்டம், இன்று இந்தியா - பாகிஸ் தான் என்ற இருபிரிவோடுமட்டும் நிற்கவில்லை. ஐந்நூற் ற்றுபத்தைந்து சுதேச சமஸ்தானங்கள் இருக்கின்றன. அவைகளில், தனித்தனி அரசர்கள் இருக்கிறார்கள். அங் கெல்லாம் தனித்தனி ஆட்சி முறைகள். இந்திய யூனிய னிலும் பாகிஸ்தான் ஆட்சியிலும் சமஸ்தானங்கள் அங்கம் வகித்தாலும், அவை தனித்து நிற்க விரும்பினாலும் தனித் திருக்கலாம் என்ற முறையில்தான், இன்றைய நிலை வகுக் கப்பட்டிருக்கின்றது. ஐதராபாத் சமஸ்தானம் தனித்தே நிற்க விரும்பி, ஒப்பந்தங்கள் வேண்டுமென்றால் செய்து கொள்ள ள எண்ணங் கொண்டிருக்கிறது. இந்த ஐந்நூற் ற்றுபத்தைந்து சுதேச சமஸ்தானங்களும், இந்தியத் துணைக்கண்டம் துண்டாடப்பட்ட நிலையை விளக்கவில் லையா? கோவா, டையூ, டாமன் போர்த்துகேசியரிடக் தானே இன்னமும் இருக்கின்றன! அவை துண்டாடப் பட்டு விளங்கவில்லையா? சந்திர நாகூர், பாண்டிச்சேரி காரைக்கால், ஏனாம், மாகி ஆகிய இடங்கள், பிரெஞ்சு கவர் னர் பரோன், நேரு சர்க்காரிடம் செய்துள்ள பேச்சு முறைப் படி, வருங்காலத்திலும் அந்தப்பகுதிகள் பிரெஞ்சுக் கலையை வளர்க்க நட்புரிமையோடு தனித்து வாழும் என்பது, பிரிந்து நிற்கும் நிலையை விளக்காதா? 1937-ம் ஆண்டு வரையிலும் சேர்ந்திருந்த பர்மா பிரிந்துபோனது, துண் டாடப்பட்ட நிலையை உணர்த்தவில்லையா? நில இயல்பு பற்றி இந்தியாவோடு தொடர்புடைய இலங்கை, பிரிந்து தனித்து வாழ்வது, பிரிக்கப்பட்ட நிலையைக் காட்ட வில் லையா? இத்தனை பிரிவுகளும் கலைக்கப்படவில்லை! கலைக்கப்
பக்கம்:புதிய பாதை 1948.pdf/58
Appearance