உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 5 - அதுபோன்றே, திராவிடத்தின் இன்றைய சீர்கேட்டை யறிந்து, இச் சீர்கேட்டிற்குக் காரணமாக இருந்தவை - இருப்பவைகளையுமறிந்து, அவற்றைப் போக்க அறிவுத் துணை கொண்டு முயற்சித்தால்தான், திராவிடம் திராவிடமாக விளங்க முடியும்! திராவிட நாகரிகமும் உலகின்முன் தலை சிறந்து ஓங்க முடியும் ! இச்சிறு நூல், திராவிடத்தின் மேம்பாட்டிற்கு நன்னிலைக்குப், பல துறைகளில் வழி வகுத்துத் தருவதே யாகும். இதனை எழுதியவர், அறிஞர், இரா. நெடுஞ் செழியன் M.A.அவர்களாவர். தோழர் நெடுஞ்செழியன் அவர்களைத். தமிழகத் திற்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர், பகுத்தறிவு மாணவ உலகில் தலை சிறந்து விளங்கிய அந் தக் காலையே, தமிழ் நாட்டுக்கு நன்கு அறிமுகமாகி விட்டவர். இன்று, அறிஞர் குழுவில் ஒருவராக அமர்ந் திருப்பவர். அவர், நாம் எந்தெந்தத் துறையில் முன்னேறிச் செல்லவேண்டும் என்பதற்கு, அவர் 'புதிய பாதை அமைத்துத் தருகிறார். திராவிட நலனில் ஆர்வங் கொண்டுள்ள தோழர்கள், இப் புதிய பாதையை யறிந்து, ஆவன செய்ய முயல வேண்டுகிறோம். 4-3-48. புதுவை. இங்ஙனம், ஞாயிறு நூற்பதிப்பசத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/6&oldid=1732751" இலிருந்து மீள்விக்கப்பட்டது