உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய பாதை 59 பிரிக்கப்பட்ட திராவிடக் கூட்டாட்சியில், சிலகாலம் வரை யாவது மேற்குறித்த சமஸ்தானங்களை அங்கம் பெறும்படி யாகச் செய்ய வேண்டும். (இப்போது இந்திய யூனியன் சர்க்காரிலும், பாகிஸ்தான் சர்க்காரிலும் சேர்ந்திருப்பது போல). நாளடைவில் மக்களின் மனம் பண்பட்டால், மன் னர்கள் வீழ்வர்! மகுடங்கள் சாயும்! சமஸ்தானங்கள் அழி யும்! மொழிவழிப் பகுதிகள் அமையும்! பண்படும்படி செய்ய வேண்டிய பொறுப்பு, நம்முடையது. தமிழகமும், ஆந்திரமும், கன்னடமும், கேரளமும் சேர்ந்திருப்பது நல்லது- சேர்ந்திருக்க முடியும். ஆகவே, திராவிடம் தனித்து வாழ்வது, இயல்வது ஆகும் என்று விளக்கினோம். இவை நான்கும் சேர்ந்து வாழுமா? என்று கேட்கத்தோன்றும். யாய கடமை. நான்கும் சேர்ந்துவாழ்ந்தால் பல னுண்டு என்பதை உணரும்படி செய்ய வேண்டுவது, நம் முடைய கடமை; அதாவது திராவிடக் கழகத்தின் தலை அந்த முயற்சி தோற்றால். தமிழகம் வரை யிலுமாவது தனிநாடுபெற்றுத்தீர வேண்டும் என்ற உறுதி கொள்ளவேண்டும். ஐக்கிய முன்னணி ஏற்படுத்தும் முயற் சியில், இன்று நாடு ஈடுபடவில்லை. ஐக்கிய முன்னணி ஏற் படுத்துவதற்கு முன்னர், இந்த நான்கு பகுதி மக்களிடத் தும், திராவிடக் கழகத்திட்டம் வைக்கப்படவேண்டும். திட்டத்தின் மீது பெரும் பாலான மக்களுக்கு அன்பும், மதிப்பும், போற்றுதலும் ஏற்படவேண்டும். பட்ட பிறகுதான், திட்டம் வெற்றிபெறும். அவை ஏற் தமிழகத்தைப் பொறுத்த வரையில், திராவிடநாடு திராவிடர்க்காக வேண்டும் என்ற உணர்வு, ஒரு சிலரிடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/60&oldid=1732859" இலிருந்து மீள்விக்கப்பட்டது