உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நமது குறிக்கோள் தான் பரவி இருக்கிறது. தமிழகத்தின் பெரும் பகுதி மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை. பெறுவதற்கான முறையில், அரசியல் நுணுக்கந் தெரிந்த அறிஞர்கள் பலர் கழகத்தில் சேரவும், சேர்ந்து தங்கள் கருத்துக்களை வெளி யிட்டு ஒன்று சேர்ந்த முடிவு வெளிவரவும், அரசியல் கழகம் எப்படிச் செயலாற்றிச் செல்ல வேண்டுமோ அப்படிச்சென்று ஒழுங்கு முறை ஏற்படுத்தவும், திராவிடப் பிரிவினை உணர்ச்சி கொண்டு தோழர்கள் முயன்றால்தான், திராவிடத்தின் மண்ணுக்குடைய உரிமையுள்ள மக்களின் ஆதரவைப் பெற்று, அவ்வாதரவைக் கொண்டு எண்ணிய திட்டத்தை நிறைவேற்ற முடியும். "இதனை இதனால் இவன் செய்யும்என்றாய்ந்து, அதனை அவன்கண் விடல்" என்று வள்ளுவர் கூறியபடி, செயல் முறை வேண்டும். யதேச்சாதிகாரம், எந்த இடத்திலும் எந்த முறையிலும் இல்லாமல் ஒழித்து, ஜனநாயக உணர்ச்சி கொண்ட மக்களை உருவாக்கும் வேலையில் ஈடுபடவேண்டும். கடமையைச் செய்ய முற்படும் நேரத்தில், பக்தி- தயை தாக்ஷண்யம் முன்னிற்காமல், அறிவு - கட்டுப்பாடு - ஒழுக்கம் ஆகியவற்றைக் காட்டும் இளைஞர்கள் முன் வந்தால், தமிழக மக்களுக்குத் திட்டத்தை உணர்த்தி, அவர்களை உணரச் செய்து, அவர்களின் ஆதரவைப் பெற முடியும். அந்த அளவுக்கு வளர்ந்தால், ஆந்திர, கன்னட, மலையாள மக்க ளிடத்தில் ஆதரவை முறையோடு பெறலாகும். திராவிடக் கழகத்தில் சேர்ந்து, நல்ல அமைப்பு முறையின் கீழிருந்து தொண்டாற்ற வேண்டிய பலர், வெளியில் நடமாடுகிறார்கள். வேறு கட்சிகளிலிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/61&oldid=1732861" இலிருந்து மீள்விக்கப்பட்டது