புதிய பாதை 61 அவர்களனைவரையும், திராவிடக் கழகப் பாசறைக்குள் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு நம்முடையது. அந்த அளவுக்குத் திராவிடக் கழகத்தின் அமைப்பு முறையை நல்ல நெறியில் வளர்த்து, அவர்களனைவரின் உள்ளத்தை ஈர்க்கும் தன்மையில் செயலாற்ற வேண்டியது? பகுத்தறிவுணர்ச்சி கொண்ட விடுதலை வேட்கையுடையோ ரின் நீங்காக் கடமையாகும். திராவிடப் பகுதிகள் நான்கும் ஒரு கூட்டாட்சியில் அமைந்தால், எல்லா வகையிலும் வளமுள்ளதாகும். முப் புறம் கடல்கள்,மற்றோர் புறம் குன்றுகள் எல்லைகளாகக் காட்சியளிக்கின்றன! ஆயிரத்தைந்நூறு மைல்களுக்கு மேற் பட்ட கடற்கரை / எதிரே மாபெரும் இந்து மாக்கடல்! கடலைக் கிழித்தேகும் கப்பல்கள்! அவை தங்கப், பல துறை முகங்கள் ! முத்தும், பவளமும் கொடுக்கும் கடல்கள்! கப்பற்கட்டுவதற்குரிய மரங்கள் விளையும் காடுகள்! அக் காட்டகத்தே வளரும் அகில்! அகிலினை ஒட்டித் தேக்கு! தேக்கினை அடுத்துச் சந்தனம்! வளப்பமுள்ள மலைகள்! மலைச்சரிவுகளிலே யானைகள்! பொன் விளையும் கோலார் தங்க வயல்! இரும்பு எடுக்கும் சுரங்கங்கள்! நிலக்கரி அகப் படும் நிலங்கள்! கண்ணாடிக்கற்கள் கிடைக்கும் இடங்கள்! கண்ணாடி காய்ச்சுவதற்கான மணல் வெளிகள்! சிமிட்டி செய்யும் மண் நிறைந்த வெளிகள்! அணுக்குண்டு செய் வதற்கான யூரேனியம் வெட்டி எடுக்கப்படும் உ கனிகள்! பருத்தி விளையும் காடுகள்/ நெல்லும் கரும்பும் விளையுங் கழனிகள்! - விளைவைப் பெருக்கும் வயல்கள்! வற்றாத ஆறு கள்! வளமுள்ள சோலைகள்! இவையனைத்தையும் நுகர் வதற்கான ஆறு கோடி மக்கள்! பின் என் திராவிடம் தனித்து வாழலாகாது? வாழலாம் வகையுணர்ந்தால்! உணர்த்தப்பட்டால்.' 3657
பக்கம்:புதிய பாதை 1948.pdf/62
Appearance