உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நமது குறிக்கோள் திராவிடத்தின் பொருள்வளம், வடநாட்டு மார்வாடி, குஜராத்தி, பனியா, மூல்தானிகளால் கொள்ளை யிடப்படு கின்றது! பிர்லாக்களும், டாட்டாக்களும், டால்மியாக்களும், கலீலீக்களும், ஷெராவ் அலிக்களும், திராவிடத்தை 'மார்க்கெட்டாகப் பயன்படுத்துகின்றனர். வெள்ளை முத லாளிகள் இது வரையில் வரையில் சுரண்டி வந்தது சிறிதளவு நின்றது என்றாலும், வட இந்திய முதலாளிகளோடு கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டு, இரு வகை முதலாளிகளும் சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். இந்த நிலை தடுக்கப்படத் தான், திராவிடம் பிரியவேண்டும் என்றுணர்த்துகிறோம். திராவிடத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து அழியும் மக்களனைவரும், இம்மண்ணுக் குடையவர் என்ற ஒரே நிலைக்குட்பட்டுத், திரு இடத்தைச் சேர்ந்த திராவிடர் என்ற இன உணர்ச்சியில் ஒன்றி வாழ வேண்டும். இந்த உணர்வு பார்ப்பனர் உட்பட எல்லோர்க்கும் ஏற்படவேண்டும் என்ப தற்காகத்தான், திராவிடக் கழகம் வேலை செய்து வருகிறது சமத்துவ சமதர்மக் குடியரசு ஆட்சியைத் திராவிடத் தில் - தவறினால் தமிழகத்தில் ஏற்படுத்தவே, சமுதாயம், பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் திராவிடக் கழகம் பாடுபடுகிறது என்றறிந்து, இளைஞர்கள் பலர் அதில் சேர்ந்துள்ளார்கள். நீதி, நேர்மை, பகுத்தறிவு ஆகியவை களுக்குக்கட்டுப்பட்டுச் செயலாற்றும் நெறியிலே, தூய்மை யான உள்ளத்தோடு சென்று பணியாற்றுவோமாக! வஞ் சம், சூழ்ச்சி, பொறாமை, பித்தலாட்டம் ஆகியவற்றைத் தொகையாக எதிர் நிறுத்திக் தூள் தூளாக்கும் காழ்ப் புள்ளம் பெற்றால், நமது குறிக்கோள் வெற்றி பெறும்! 3651

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/63&oldid=1732863" இலிருந்து மீள்விக்கப்பட்டது