உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய பாதை. 1. தமிழ் 3651 'உயர் தனிச் செம்மொழி என்று போற்றப்படுவது! இலக்கண இலக்கியச் செறிவுடையது! பழம் பெருங் காலந்தொட்டு எழில் குன்றாது இயங்கி வருவது! உள்ளக் கருத்தை ஒலிக்குறிப்பினால் உணர்த்தத்தொடங்கிய கால முதல், இயற்கையோடு இயைந்து வளர்ந்து வருவது! கழகமிருந்து போற்றிக் காப்பாற்றப்பட்டு வளர்க்கப் பட்டுவந்தது!இதனுடன் தோன்றியஏனையவை, வழக்காறு ஒழிந்து காணப்படவும், இது ஒன்றுமட்டுமே இது காறும் உயிருடன் நின்று நிலவும் பெற்றியமைந்தது என்று இவ்வாறாகப் போற்றிப் புகழப்படும் நம் தாய் மொழியாம் தமிழின் இற்றைக்கால நிலையை, உய்த்துணர வேண்டியது இன்றியமையாததாகின்றது. ஒருகாலத்தில் வளர்ந்து செழித்திருந்த தமிழ், பல்வேறு ஏதுக்களால் தாக்குண்டு, செழுமை குன்றி, வளர்ச்சியற்ற நிலையை எய்தியது என்பதை, வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. தடைப்பட்டுத் தேங்கிய நிலை யை எய்திய தமிழ், இன்றும் அதே நிலையில்தான் இருக் கிறது; வளரவில்லை என்பதைத், தமிழ்ப்புலவர்கள் சிறிது பொழுதாயினும் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/8&oldid=1732753" இலிருந்து மீள்விக்கப்பட்டது