பக்கம்:புதிய பார்வை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*38 புதிய பார்வை

சூரிய கமஸ்காரம் பற்றிச் சற்று அதிகமாகவே பாடியிருக் கிருர். தமிழ் இலக்கியங்களில் செளர மதம்' என்ருே சமயம் என்ருே பழைய காலத்தில் ஒரு பிரிவு தனியே கூறப் படா விட்டாலும் சூரியனே வணங்கும் வழக்கம் இருந்தது தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரிக்குமுன், சூரியனேக் கூவி கியாயம் கேட்பதையும் பார்க் கிருேம். இயற்கைக் கடவுளாகிய கதிரவனைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. வழிபடுகின்றன. பின்ன எளில் ஆறு சமயங்களில் ஒன்ருன செளர சமயமும் பெரு வழக்காக வருவதற்கு அங்காளில் ஆதியில் எழுதிய தொல் காப்பியச் சூத்திரமான 'காலம் உலகம்-என்று தொடங்கு வதில் இடமிருக்கிறது என்பதை அறிகிருேம். பால்வரை தெய்வம், அறக்கடவுள், இவர்களோடு ஞாயிறும் எண் கணப்பட்டதிலிருந்தே அது தெரிகிறது. சிலப்பதிகாரமும், திருமுருகாற்றுப் படையும், மேலும் அதை கிரூபிக்கின்றன. விகண்டோ தெய்வப் பெயர்த் தொகுதியிலேயே சூரியனைச் சேர்த்து விடுகிறது. இவையெல்லாம் சூரியசீனத் தொழும் பண்பையே குறிப்பாகவும், கேராகவும் புலப்படுத்து கின்றன. -- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/100&oldid=598148" இலிருந்து மீள்விக்கப்பட்டது