பக்கம்:புதிய பார்வை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது இதிகாசங்களும் புதிய பார்வையும்

உள்.ழறி ஊழியாக கிகிலத்துப் பெருமை பெற்றுவரும் பாரத நாட்டின் பழம் பண்பாடு, பழஞ்சிறப்பு இவை களுக்கு இன்றைய அடையாளங்கள் என்னவென்று பிற காட்டார் கேட்க கேர்ந்தால் நாம் எதைச் சுட்டிக் காட்டு வோம்? எவற்றைக் கொண்டு கம்முடைய பழைமையைக் காப்பாற்றிக் கொள்வோம்? இத்தகைய சங்தேகங்கள் நமக்கு எப்போதாவது எதற்காகவாவது ஏற்பட்டிருக் கிறதா ? .

ஏற்படாவிட்டால் என்ன ? நாம்தான் ஏற்படுத்திக் கொள்வோமே! சந்தேகங்கள் ஏற்பட்டால்தானே விடை களேக் காண வேண்டுமென்ற ஆர்வமே தோன்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது: நம்மிடம் நமக்கே உரிமையுடைய மூன்று மாபெரும் இதிகாச காவியங்கள் இருக்கின்றன. அம் மூன்று காவியங்களும் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு வகையில் நமது பண்பாட்டின் தொன்மையையும், பெருமை யையும் பறைசாற்றி உலகுக்கு அறிவிக்கக் கூடியனவாக இருக்கின்றன,

இராமாயணம் பெண்மையின் வெற்றியைச் சொல் கிறது. பாரதம் அறத்தின் வெற்றியைச் சொல்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/101&oldid=598150" இலிருந்து மீள்விக்கப்பட்டது