பக்கம்:புதிய பார்வை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

측00 புதிய பார்வை

ஆனல் பாகவதம் யாருடைய வெற்றியைச் சொல்லுமோ என்று எண்ணுகிறீர்களல்லவா? உலகில் அறத்தொடு இயைந்தனவும் நல்லனவுமாகிய யாவும் வெற்றி பெறு: வதற்கு மூலமான பரம்பொருள் ஒன்று இருக்கிறதென்று நமக்குத் தெரிந்திருக்கின்றதே, அந்தப் பொருளின் அசா தாரணமான வெற்றியை விவரிப்பதுதான் பாகவதம்.

எல்லா மனிதர்களுக்கும், எல்லாப் பொருள்களுக்கும். வெற்றியைக் கொடுத்த-கொடுக்கிற-கொடுக்கும் பரம் பொருளின் வெற்றியைக்கூட வியப்புடன் கோக்க வேண் டுமா? வியப்பு என்பது பார்க்கிற பொருளில் இல்லை. பார்க்கப்படுகிற விதத்தில்தான் வியப்போ, வியப்பின் மையோ இருக்கிறது. மனித உலகத்தில் மனிதர்களுக் கிடையே, கடவுள் தன் இதயக் கருத்துக்களே எளிய முறை: யில் கிறைவேற்றிக் கொண்டதைப் பாகவதம் சொல்கிறது. பகவானைப் பற்றியது பாகவதம். கண்ணனின் திருவிளை யாடல்கள் கிறைந்த ஒரு தொகுதியென்றே பாகவதத்தைக் கூறலாம்.

இங்கே மூன்று இதிகாச காவியங்களின் நாயகர்களைப் பற்றியும் ஒரோர் கினேவு எழுகின்றது. இராமனைப் பற்றிச் சிங்திக்கும்போது, உரிமையை கிலேகாட்டித் தீமையை அழிப்பதற்காகப் போராடிய வீரத் தலைவன் ஒருவனின் உருவம் காட்சியளிக்கிறது. பாரதத்தின் கதா காயகனென்று குறிப்பிட்ட யாரையும் தனித்தனியாகச் சொல்லிவிட முடியுமா? பாண்டவர்கள் ஐவருமே பாரதக் கதைக்கு நாயகர்கள் தாம். பாண்டவர்கள் சத்தியத்தை யும், தருமத்தையும் கம்பிப் போராடி வெற்றிபெற்ற நினைவு பாரதக் கதையைப் பற்றி எண்ணும்போது தோன்றுகிறது. ஆனல் பாகவதக் கதையைப் பற்றி கினேக்கும்போது அற்புதமும், அதிசயமும், வியப்பும் கலந்த ஒருவகைப் புதிய இனிய அனுபவம் நமக்கு எக்காலத்தும் ஏற்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/102&oldid=598152" இலிருந்து மீள்விக்கப்பட்டது