பக்கம்:புதிய பார்வை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி i0;

கண்ணன் என்னும் தெய்வீகக் குழங்தை ஒன்று இன்ப துன்பங்கள், ஆசை, பாசங்கள், அவலக் கவலைகள் மிகுந்த மனித முயற்சிகளுடன் விளையாடிச் சிரித்துக்கொண்டே அவற்றை வெல்கிறது : வென்று முன்னேறுகிறது. தன் பிறவிப் பயனே முழுமையாக்குகிறது. தெய்வத்தின் இந்த விளையாட்டை அழகாக விவரித்துச் சொல்வதுதான் பாகவதக் கதை.

இராமாயணத்தில் சீதையின் துன்பங்களைப் படிக்கும் போது இராவணனை எண்ணிக்குமுறுகிருேம். பாரதத்தில் பாண்டவர்களின் துன்பங்களைப் பார்க்கும்போது துரியோ தனதியர்களே எண்ணிக் குமுறுகிருேம்.

பாகவதத்தில் கண்ணனுக்கு ஏற்படும் துன்பங்களே நினைக்கும்போது நாம் குமுறுவதில்லை. சிரிக்கிருேம். கதை யைப் படித்துக்கொண்டே போகும்போது, இந்தக் கண்ணனல் இவைகளைப் போன்ற துன்பங்களே உறுதியாக வெல்லமுடியும் என்ற நம்பிக்கை நமக்கே உண்டாகி விடுகிறது. எனவே பாகவதக் கதையைப் படிப்பதனல், கண்ணனுக்கு மண்ணுலகில் ஏற்பட்ட அனுபவங்களே அறிவதனல், நமக்கு வாழ்வில் கம்பிக்கையும் திருப்தியும். கிடைக்கின்றன. இன்னது, இவ்வளவினது, இப்படிப் பட்டதென்று விவரித்துச் சொல்லமுடியாத ஒருவகைத் தெய்வீக மகிழ்ச்சி பாகவதக் கதைகளுக்குள் இடை யீடின்றிப் பரந்திருக்கிறது. உலகிலேயே அழகும் இளமை, யும் தெய்வீகமும் கிறைங்த கதாபாத்திரம் இந்திய நாட்டுக் கண்ணனே என்ற கினேவும் வருகிறது. பாகவதத்தைப் படிக்கும்போது எத்தனையோ பல யுகங்களுக்கு முன்னல் கடங்த சாதாரணக் கதையைப் படிப்பதாகத் தோன்று. வில்லை. வாழ்க்கையின் நம்பிக்கையை, மெய்யின் ஒளிவு. மறைவில்லாத உருவத்தை, அத்தியாயம் அத்தியாயமாகப் படித்துக்கொண்டு போவதுபோல் இருக்கிறது. நாம்

ւկ-7 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/103&oldid=598154" இலிருந்து மீள்விக்கப்பட்டது