பக்கம்:புதிய பார்வை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 02 புதிய பார்வை

பெற்றிருக்கும் முப்பெரும் இதிகாச காவியங்களில் பாகவதம் ஒன்றிற்கே இப்பெருமை உண்டு.

பாகவதக் காவியத்தைத் தமிழில் செவ்வைச் சூடுவார் என்ற புலவர் நாலாயிரத்துக்கு மேற்பட்ட விருத்தப் பாடல்களால் பாடியுள்ளார். வேறு சில பாகவதங்களும் செய்யுள் வடிவில் பாடப் பெற்றிருப்பதாகக் கூறுகிருர்கள். ஆளுல் அவை வழக்கில் நூல்களாக நிலவிவரக் காண் கின்ருேமில்லை. செவ்வைச் சூடுவார் பாகவதத்தையே வேருெரு புலவர் பாடியதாக எண்ணிக்கொண்டு அச்சாக்கி வெளியிட்டவர்களும் உண்டு. காட்டு வழக்கில் கதா காலட்சேபம் செய்பவர்கள் எத்தனையோ விதமான பாகவதக் கதைகளேச் சொல்லிவரலாம். ஆனல் அவற்றை யெல்லாம் காவியங்களென்று இலக்கிய ரீதியாக ஒப்புக் கொண்டு விடுவதற்கில்லேயாயினும் கதையாக ஒப்புக் கொள்ளலாம்.

கண்ணனின் கதைகளை மட்டும்தான் பாகவதக் காவியம் கூறுகிறதென்று வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. பாகவதத்தில் மொத்தம் பன்னிரண்டு கங்தங் கள் (பிரிவுகள்) இருக்கின்றன. அவற்றில் பத்தாவது கந்தத்திலிருந்துதான் கண்ணனுடைய முழுமையான திரு அவதாரங்களும், திருவிளையாடல்களும் விவரிக்கப் படுகின் றன. ஆனாலும் மற்றப் பகுதிகளும் பகவாைேடு தொடர் புடைய நிகழ்ச்சிகளாகவே இருப்பதளுல் பெரும்பான்மை பற்றி நூலுக்குப் பாகவதம் என்று பெயரேற்பட்டது.

பாகவதக் காவியம் பன்னிற மலர்கள் பூத்துக் குலுங் கும் மிகப்பெரியதொரு பூஞ்சோலை. -

  • 米 - * - 事

பல்லாயிரம், பல்லாயிரங் கோடி ஆண்டுகளுக்கு

முன்னல், யுக யுகாந்திரங்களின் எல்லேயைக் கடந்த காலத் தின் பெரும் பரப்பில் ஒரு வைகறை நேரம் கிழக்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/104&oldid=598156" இலிருந்து மீள்விக்கப்பட்டது