பக்கம்:புதிய பார்வை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 04 புதிய பார்வை

தெய்வீகம், எங்கும் தவம்,-அந்த வனத்தில் இருந்தவை இவை.

சோம்பல், மிடி, துயரம், பேரான்ச-அந்த வனத்தில் இல்லாதவை இவை. அங்த அருங்காலே நேரத்தில் அவ்: வனத்தில் ஒர் அழகிய காட்சியைக் காண்கிருேம். முழு மதியைச் சுற்றி விண் மீன்களைப் போலவும், சிறிய பல நீர்ப் பூக்களுக்கு இடையே ஆயிர்விதழ்த் தாமரை ஒன்று மலர்க் தாற் போலவும் அங்கோர் மரக் கூட்டத்தினிடையே தெய்வீகத் தோற்றத்தையுடைய ஒரு முனிவரைச் சுற்றிப் பல முனிவர்கள் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். x

ஆகா அமைதியான சூழ்நிலையில் ஞானத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் அந்த முனிவர் கூட்டம் நம் உள்ளத்தில் எவ்வளவு புனிதமான எண்ணத்தை உண் டாக்குகிறது? அருகில் நெருங்கிப் பார்ப்போம். -

அதோ நடு நாயகமாக அமர்ந்திருக்கின்ருரே, அவர் தான் சூத முனிவர். கல்வி கேள்விகளில் சிறந்த மகா மேதை. உயரிய உண்மைகளின் இருப்பிடம். நைமிசார னிய வனத்திலுள்ள எல்லா முனிவர்களும் போற்றி வணங்கும் பெரியவர். அந்த அறிவுக் களஞ்சியத்திடம் சுற்றியிருந்த முனிவர்கள் அன்று ஒரு வேண்டுகோள் விடுத் துக் கொண்டிருந்தனர். நைமிசாரணியத்தில் வசிக்கும் சவுனகாதி முனிவர்களாகிய அவர்கள், 'சூத முனிவரே! உங்களிடம் மிகவும் பயனுள்ளதும், உயர்ந்ததும், சிறந்தது. மான ஒன்றைப் பற்றிக் கேட்கப் போகின்ருேம். அதனே நீங்கள்தான் விளக்குவதற்குத் தகுதியுள்ளவர்கள். வீடு பேற்றை அடைவதற்கான கிளேபட்ட வழிகளில் ஒன்றே யாக இணையற்று உயர்ந்தது எதுவோ அதைப் பற்றிக் கூறுங்கள். எங்த ஒரு கடவுளின் அவதாரத்தில்ை உலகம் இன்பத்தை அடைங்ததுவோ, எந்த ஒரு கடவுளின் பிறப் பால் உலகத்து உயிர்கள் பாதுகாப்பைப் பெற்றனவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/106&oldid=598160" இலிருந்து மீள்விக்கப்பட்டது