பக்கம்:புதிய பார்வை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 107

பதற்கும், மற்ருென்றிற்கு அவை கிடைக்காததற்கும் கார ணம் என்ன? அடிப்படை நோக்கில் பார்க்கப் போளுல் இரண்டும் கல்தானே? ஒன்று, குறிப்பிட்ட வளைவு நெளிவு. களோடு கூடிய வடிவத்தைத் தாங்கி நிற்கும் கல். தூபப் புகையும், தீப ஒளியும், பட்டுப் பீதாம்பரமும், நறுமண. மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளின் மணமும் கண்

டது. மற்ருென்று மிதிபடுகின்ற பாதங்களிலிருந்து சிந்திய மண்ணேத் தவிர வேறெதையும் அறியாதது. இந்தப் பெருமை சிறுமைக்கும், போற்றுதல் போற்ருமைக்கும் காரணம் என்ன? பெருமை என்பது எதற்கும் அல்லது யாருக்கும் எப்போதும் தாகை அமைந்து விடுவதில்லை.

சிலர் பெருமையை உண்டாக்கிக் கொண்டு அது தங்களே

விட்டுப் போய்விடாமல் பாதுகாத்துக் கொள்கிருரர்கள்.

இன்னும் சிலருக்குப் பெருமை உண்டாக்கிக் கொடுக்கப் படுகிறது. எப்படியானல் என்ன? போற்றுகிற மனப்

பண்பும், மரியாதையும் இருந்தால்தான் பெருமை உண்டு.

இங்த துணுக்கமான உண்மையைத் திருவள்ளுவர் வெகு அழகாகக் கூறியிருக்கிருர்:

"ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன் இனத்தான் கொண்டொழுகின் உண்டு,'

பெண்களுக்குக் கற்பு எவ்வாறு தங்களைத் தாங்களே. பாதுகாத்துக் கொள்வதனல் அமைகிறதோ அதே போல் பெருமையும் தன்னைப் பேணுகிறவர்களிடம்தான் கிலேத் திருக்க முடியும். மக்களைப் பொறுத்த மட்டில் இந்த முடிவு: சரி. ஒரு காவியம் அல்லது ஒரு நூலுக்குப் பெருமை ஏற். பட்டு கிலேக்க வேண்டுமானல் அதற்கு என்ன செய்வது? பயபக்தியோடு அணுகுவதும், உணர்ந்து சுவைப்பதும்தான் அதற்குச் சரியான வழிகள். 'இவை பழங்கதைகள். இவற்றைப் படிப்பதல்ை ஒரு பயனும் இருக்க முடியாது” என்று படிப்பதற்கு முன்பே காரண காரியமில்லாததோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/109&oldid=598166" இலிருந்து மீள்விக்கப்பட்டது