பக்கம்:புதிய பார்வை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 08 புதிய பார்வை

வெறுப்பு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டுவிட்டால் எதிலும் சுவை காண முடியாது. எதற்கும் பெருமை கொடுக்க முடியாது. அத்தகைய வெறுப்பு மனப்பான் மையை உண்டாக்கிக்கொண்டு விட்டவர்களுக்குத் தம்மைத் தவிர, தாம் பேசுவதைத் தவிர, வேறு எதுவும் உயர்ந்த தாகவோ, பெரியதாகவோ தோன்ருது, மற்றவர்களுக்கு, மற்றவர்களுடையவற்றிற்குப் பெருமை அளிக்கவும், போற் றுதல் செய்யவும் தகுந்த விரிவான மனப்பான்மை உள்ள வர்கள்தாம் காவியம், இலக்கியம் இவற்றில் மெய்யான இன்பத்தைக் காண முடியும்.

இராமாயண பாரத, பாகவதக் கதைகளேப் படிப் பதற்கு முன்பு மேலே குறிப்பிட்ட மனப் பக்குவத்தை ஏற் படுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இதை இவ்வளவு விரிவாக இங்கெழுத நேர்ந்தது. இந்த கோக் குடன் இவற்றைப் படித்தால் இன்பம்காண முடியுமென்று வாசக அன்பர்களுக்கு உறுதி கூறுகிறேன். பாகவதக் காவி யத்தின் முற்பகுதியில் உலகத் தோற்றத்தையும் உயிர்களின் பிறப்பு முறையோடு தொடர்புடைய திருமாலின் பத்து அவதாரங்களையும் நான்முகக் கடவுளிடம் காரதர் கேட்டுத் தெரிந்து கொள்வதுபோல் கூறப்பட்டிருக்கின்றது.

கிலம், ர்ே, தீ, வளி, விசும்பு ஆகிய இப்பூதங்கள் ஐங் தும் கலங்த மயக்கமாகிய இப்பிரபஞ்சம் ஒரு கட்டுப்பாட் டிற்கு உட்பட்டுத் தோன்றியிருக்கிறது. ஒரு கட்டுப்பாட் டுக்கு உட்பட்டு அழியப் போகிறது. இது தோன்றியிருப் பது எவ்வளவிற்கு உண்மையோ, அவ்வளவிற்கு அழியப் போவதும் உண்மை. தோற்றத்தையும், அழிவையும், முறையே தொடக்கமும் முடிவுமாகக் கொண்டிருக்கும் இக் தப் பெரிய உலகத்தில் மூல காரணமான பொருள் ஒன்று கமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ இருந்து வருகிறது. காரணமில்லாமல் காரியங்கள் நடக்குமோ? எனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/110&oldid=598168" இலிருந்து மீள்விக்கப்பட்டது