பக்கம்:புதிய பார்வை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி i09.

தோற்றம், ஒடுக்கம் இரண்டுக்கும் நடுவே இயக்கம்; என்ற இம்மூன்று செயல்களுக்கும் ஆதிகாரணமான பரம்பொருள் உள்ளதாக வேண்டும் அல்லவா?

அந்தப் பரம்பொருளின் அம்சங்கள் பல. அவதாரங்' களும் பல. மானிட உலகை அவ்வப்போது ஏற்படும் தர்ம, அதர்ம, சத்திய அசத்தியக் குழப்பங்களிலிருந்து மீட்பதற் காக எத்தனையோ இடங்களில், எத்தனையோ விதங்களில் பரம்பொருள் வெளிப்படுகிறது. திருட்டும், கொலையும், பொய்யும், வழுவும்.எக்த எங்த இடங்களில் மலிந்துவிடுகின் றனவோ அங்கெல்லாம் போலீஸ்காரர்கள் கண்ணும் கருத்துமாக அலேயவில்லையா? பரம்பொருளின் பல்வேறு அவதார இரகசியங்களே விளக்குவதற்கு இந்த ஒரே ஒரு சிறிய உதாரணம் போதுமென்று கினைக்கிறேன்.

இத்தகைய அவதாரங்களில் கிருஷ்ணுவதாரம் பரி' பூரணமானது: சுவையான கிகழ்ச்சிகள் கிறைந்தது. பிறவிப் பிணிக்கு மருங்தாகிய கீதை கண்ணன் அவதாரத்தினுல் தான் நமக்குக் கிடைத்தது. மகாபாரதக் கதைகளைப் படிக் கும்போதே கண்ணபிரானின் பெருமை நமக்கு முழுமை யாக விளங்கியிருக்கும். ஆனால் மகாபாரதக் காவியத்தில் எவ்வளவு பெருமையிருங்தாலும் கண்ணன் அங்கு ஒரு துணைப் பாத்திரம்தான்.

பாகவதமோ முழுக்க முழுக்க அவனுக்கே சொந்தமான காவியம். பாண்டவர்களின் பெரிய வாழ்க்கைப் பரப்போடு தொடர்புடைய கண்ணனின் ஒரு சிறிய வாழ்க்கைப் பகுதி யைத்தான் மகாபாரதத்தில் காண முடிந்தது. இருபது முப்பது பேர்களேக் குழுவாக அமரச் செய்து எடுத்த புகைப்படத்தில் நடுவில் உட்கார்ந்துகொண்டிருக்கிற ஒரு வரைப் போலக் கண்ணன் பாரதத்தில் காட்சியளித்தான். ஒருவரை மட்டும் தனியாக அமர்த்தி எடுத்துப் பெரிதாக் கிய (Enlarged) புகைப்படத்தைப் போலப் பாகவதத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/111&oldid=598170" இலிருந்து மீள்விக்கப்பட்டது