பக்கம்:புதிய பார்வை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邬目4 புதிய பார்வை

குவித்து கீரையையும் ரோமத்தையும் கலங்து கடைந்தது போல் கவிதை நடையில் சாதாரண அர்த்தமும் கூடத் தர முடியாத பதச் சேர்க்கைகளே அள்ளித் தெளித்து விளிப் புரையே விரிந்து-பேசப்படு பொருள் சென்று தேய்ங் திறும் 'சொற்பெருக்கு'க்களே இன்று சண்டமாருதங் களாகப் பேர் பெறுகின்றன. பக்குவமடைந்த மொழியில் இவை சிறுபிள்ளைத்தனமான காரியங்களாகவே கருதப் படும். பல்லாயிரம் வெறும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள ஒரு சொற்பொழிவு தேவையில்லே, நல்ல அகராதி ஒன்றே போதும்.

மூவகை நயங்கள் :

சொற்கள் பேசும்போதோ, எழுதும்போதோ மூன்று விதங்களால் பொருள் நயம் தருகின்றன. அவற்றுக்கு அவாய் நிலை, அண்மை கிலே, தகுதி கிலே என்று பெயர். இந்த மூன்றையுமே இன்று பேசும் பேச்சு வாக்கியங்களி லும், எழுத்து வாக்கியங்களிலும் காண முடிவதில்லை.

சில இடங்களில் "சாப்பிட்டான்' என்று மட்டும் எழு தினலே 'எதைச் சாப்பிட்டான்' என்பதை அவாவி உணர முடியும். அதற்குத்தான் "அவாய் கிலே' என்று பெயர். இன்னும் சில இடங்களில் 'எதைச் சாப்பிட்டான்' என் பதையும் சேர்த்தே வெளிப்படையாகச் சொல்ல வேண்டி யிருக்கும். ஆல்ை இன்று அவாய் கிலேயாகவே விட்டுவிட வேண்டிய இடங்களில் சொற்களை இட்டு நிரப்பியும் சொற் களே இட்டு கிரப்பாவிட்டால் பொருள் குழம்பக் கூடிய இடங்களில் 'அவாய் கிலேயாக விட முயன்றும் தடுமாறு கிற பேச்சுக்களும், எழுத்துக்களும் நிறைய வருகின்றன. மது, பால், காபி, டீ. எல்லாம் விற்கிற ஒரு ஹோட்டலில் ஒருவன் பால் பருகியதைக் குறிக்கவிரும்பினல் "பருகினன்' என்று மட்டுமே அவாய் கிலேயில் குறிக்க முடியாது. எதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/116&oldid=598180" இலிருந்து மீள்விக்கப்பட்டது