பக்கம்:புதிய பார்வை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 6 புதிய பார்வை

தன்மைதான். இதையும் இன்றையப் பேச்சிலும், எழுத்தி லும் காண முடிவதில்லை.

இனிமேல் சொற்களின் தகுதிகிலே பற்றிக் காண லாம்.

"அவன் துன்பப்படவில்லை' என்ருே, 'அவன் துன்பத் தைத் தவிர்க்க எண்ணினன்' என்ருே எழுத வேண்டிய அல்லது பேச வேண்டிய வாக்கியத்தை, "அவன் துன்பப் பட விழையவில்லை" என்று சிலர் இப்போது எழுதி வருகி ருர்கள். "விழைதல்' என்ருல் 'முனைந்து விரும்புதல்” என்று பொருள். அங்தப் பதம் இங்கே தகுதியாக கிற்க வில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். வசனம் எழுது வதோ, பேசுவதோ, கவிதை எழுதுவதைவிடச் சிரம மானது.

இங்கோ வாக்கியம் எழுதத் தெரியாதவர்கள் உரை நடையும், உரைநடையே எழுதத் தெரியாதவர்கள் கவிதை, யும், கவிதை என்னவென்றே தெரியாதவர்கள் மகாகாவிய மும் எழுத முயலுவதைக் காண்கிருேம்.

' "I dont want to take risk" srcii Liaos saar த்துத் தமிழில் "நான் துன்பப்பட விழையவில்லை' என்றெழுது வோரும் உண்டு. முழுக்க முழுக்கத் தமிழையே படித்துக் கெட்ட சிலரும், முழுக்க முழுக்க ஆங்கிலமே படித்துக் கெட்ட சிலரும், தமிழும், ஆங்கிலமும் அரைகுறையாகக் படித்துக் கெட்ட சிலரும், என்று வகை வகையாகக் கெட்ட வர்கள் இங்கே நிறைய இருக்கிருர்கள். எழுத்துக்கோ, பேச்சுக்கோ, பிறக்கும் நிலம், சென்று விளையும் கிலம் என இரண்டு கிலம் இருப்பதையே அவர்கள் அறிவதில்லை. நாடகம்-திரைப்படம் : -

சொற்பொழிவு மேடையைவிட இருவகை கிலத்தைப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/118&oldid=598184" இலிருந்து மீள்விக்கப்பட்டது