பக்கம்:புதிய பார்வை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 புதிய பார்வை

¢¢ir (Journalistic talents) sajøfláásLiLJLu_ør. @Tájavera; செம்மையாக கடத்தப்படுகிறது, என்பதைவிட எவ்வளவு இலட்சம்பேர் படிக்கிருர்கள் என்பதே பெருமையாகமாறிய காலம் இதுதான். இலக்கியப் பத்திரிகைகள் தங்கள் கிலேக் குப்பயங்து, தயங்கியகாலமும் இதுதான். ஏறக்குறையமேலே காட்டுப் பத்திரிகைத் துறையின் விளைவு (Impact of Western journalism) இங்தச் சமயத்தில் தமிழிலும் ஏற்பட் டது. பத்திரிகைத் துறை செல்வாக்கான ஒரு தொழிலாக, ஜனநாயக சாதனமாக மாறியது; மாற்றப்பட்டது. இரண் டொரு இலக்கியப் பத்திரிகைகளையும் இந்த கிலே நன்கு பாதித்தது. இந்தச் செல்வாக்கின் முழுப்பயனைக் குமுதம்" போன்ற வெகு ஜன சஞ்சிகைகள் விளைவுறச் செய்தன. இதே சமயத்தில் தென்மொழி, முத்தாரம், போன்ற ஏடு கள் மொழியுணர்ச்சிக்காகப் பாடுபடத் தோன்றியபோது தமிழ்ப்பொழில் போன்ற பழைய ஏடுகளின் நோக்கத்துக் குப் புதிய விறுவிறுப்புப் பிறந்தது.

வெகுஜன சஞ்சிகைகளின் அமோக வளர்ச்சி இலக் கியப் பத்திரிகைக்காரர்களுக்குப் பயத்தை அளித்தது. இந்தப் பயம் இரண்டுவித விளைவுகளே உண்டாக்கியது. வெகுஜன சஞ்சிகைகளிலிருந்து வேறுபட்ட தரமான நல்ல இலக்கியப் பத்திரிகைகளே நடத்த வேண்டுமென்ற பிடி வாதம் சிலருக்கு உண்டாகவும், வெகுஜன சஞ்சிகைகளே ஆதரிப்போர் அந்த வழியிலேயே முற்றிலும் போய்விடவும் நேர்ந்தது. இதனால் இலக்கியத் திறனுள்ள பத்திரிகை களில் கவனம் செலுத்துவோரும்-அத்தகைய வாசகர் களும்-தனித் தனியே தங்கள் துறைகளில் அக்கறை செலுத்தத் தொடங்கினர். தமிழ் இலக்கியப் பத்திரிகை களின் வளர்ச்சிக்கு இந்த நிலை ஓரளவு உறுதுணே புரிவதா யிருந்தது-என்பதையும் மறந்து விடுவதற்கில்லை. இலக் கியத் தரமான குழு ஒன்று எழுத்துலகிலும் வாசகர் உல கிலும் உண்டாகவும் இந்த வெகுஜன ரஞ்சகமான இதழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/12&oldid=597967" இலிருந்து மீள்விக்கப்பட்டது