பக்கம்:புதிய பார்வை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 8 புதிய பார்வை

விடுகிருனே அங்கே மேடை தோற்கிறது. அவை மேடையை வெல்கிறது. மேடை தோற்க அவை வெல்லும் கிலைமை அதாவது கலையை வென்று விழுங்கும் கிலேமை கலைக்கே-அபாயமானது. துய்ப்போன் கிலத்துப் பொருத்த மான சுவையை விளைவிக்க முடியாத பேச்சு, தோற்றம், மெய்ப்பாடு, பாட்டு யாவுமே கலேயின் எலாமைகளாகக் கருதப்படும். இருவகை கிலமும் விளேயாத சுவை இன்பம் பயவாது. உணர்வோன் உணர்த்தப்படுவோன் என்ற இரண்டு எல்லைகளில் உணர்த்தப்படுவோன் சுவை காணுத வரை இருவகை கிலமும் கிறைவதில்லை.

இசைமேடை

நமது இசை மேடைகளில் தமிழ்ப்பாடல்கள் மிகக் குறைவாகவே பாடப்படுகின்றன. தெலுங்குப் பாடல் களும், இந்துஸ்தானிப் பாடல்களும் அதிகமாகப் பாடப் படுவதையும் காண்கிருேம். உய்ப்போன் கிலத்து இசை, துய்ப்போன் கிலத்து உணரப்படாமையும்,புரிந்துகொள்ளப் படாமையும் உண்டு. அர்த்தமே புரியாத பாடல்களைக் கேட்டுக் கொண்டு மணிக்கணக்காக அமர்ந்திருப்பது விந்தையாகவும், விநோதமாகவும் தோன்றுகிறது. தெலுங் குப் பாடல்களையும், இக்துஸ்தானிப் பாடல்களையும் அறவே ஒழிக்க வேண்டுமென்று கூறவில்லை. கலைக்குக் கடுமையான மொழிவரம்பு கூடாதுதான். ஆல்ை அதே நேரத்தில் மேடையில் பாடும் பாட்டு அவையால் உணரப்படாது போலியாகக் கண்மூடி ஒசையின்பத்தை மட்டும் இரசிப்பது பாடலுக்குத் தோல்வி, புரிய வைப்பதில் மேடையும் தோற்று, புரிந்து கொள்வதில் அவையும் தோற்று ஏனே தானேவென்று நிகழும் ஒரு கலேயினல் என்னதான் பயன் விளைய முடியும் பொருளும் உணர்ந்து இசையினிமையை யும் அநுபவிப்பதுதான் உயர்ந்த இரசனே. மனிதர்களாக இருந்து இசையை இரசிப்பதிலுள்ள ஒரே பெருமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/120&oldid=598188" இலிருந்து மீள்விக்கப்பட்டது