பக்கம்:புதிய பார்வை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 புதிய பார்வை

சராசரி மனிதனுடைய வாழ்க்கை இலட்சியம் தன்னளவில் துன்பங்களேத் தவிர்ப்பதும் சுகங்களைத் தேடுவதும்தான். சராசரி மனிதன் அதிகபட்சமாகச் செய்ய முடிந்த பொது கலச் செயல் தன்சீனத் தவிர இன்னொரு மனிதனுக்குத் துன்பம் வரும்போது சிறிது அதுதாபம் கொள்வதுதான். தானும் ஒரு மனிதன் என்பதை நிரூபித்துக் கொள்வதற். காக அவன் இதற்குமேல் எதுவும் செய்ய முடியாது. ஆனல் இந்த அளவில் தானும் தன் மனிதத் தன்மையும் மறந்து போய்விடாமலாவது வாழ்வதற்கு முடியும்.

தொழில் முறையில் மாறி மாறி ஏக்கங்கள் அமைக் திருப்பதைப் பற்றிச் சொன்னேன். சராசரி மனிதனுக்கு முக்கியமான தொழில், வம்புகள் இல்லாமல் கூடியவரை செளகரியமாக வாழ்வதுதான். செளகரியமாக வாழ்கிற வர்களுக்கும், ஏதோ சில காரணங்களால் அப்படி வாழ முடியாதவர்களுக்கும், நடுவில் உள்ள வாழ்க்கைப் போட்டி தான் உலகெங்கும் வியாபித்துள்ள பெரிய கட்சிகளின் அடிப்படை உணர்ச்சி. செளகரியமாக இருப்பதாக மற்ற வர்களால் கினைக்கப்படுகிறவர்களுக்கும் சில அசெளகரியங் கள் இருக்கும். ஏனென்ருல் உலக வாழ்க்கையில் முடி வான செளகரியங்கள் எவை என்பது இந்த விநாடி வரை கணிக்கப்படவில்லை. என்னென்ன செளகரியங்களைப் பெற்ருல்தான் திருப்தி அடைய முடியுமோ அவற்றைப் பெருமலே அந்தத் திருப்திகளே அடைந்துவிட முயல்கிற வன் தீரன். அவன் எந்தத் தொழிலச் செய்துகொண் டிருந்தாலும் அதில் சுகமும், கிறைவும் காண முடியும். அவன் செய்து நுகர்கிற தொழில் துன்பப்படுதல் என்ற ஒன்ருக இருந்தாலும் அதை அவளுல் பொறுத்து கிற்க முடியும், - - திட்டமான வாழ்க்கை

தன்னுடைய வருவாய்க்கு மீறிய செலவும், செலவு செய்து காக்க முடியாத குடும்பமுமாக வாழ்கிற நகரவாசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/124&oldid=598196" இலிருந்து மீள்விக்கப்பட்டது