பக்கம்:புதிய பார்வை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | 27.

நிற்கும் மனிதாபிமானத்தை உருவாக்கவும் சமுதாய நம் பிக்கை நிறைந்தால்தான் முடியும். இன்றைய கிலேயில் இந்த காட்டுக்கு நாம் செய்ய முடிந்த பெரும் பணி சமுதாய கம்பிக்கை உள்ளவர்களாக வாழ்வதும் வாழப் பழக்கிக் கொள்வதும்தான். .

காட்சிக்கு எளிமை

மனிதனுடைய நிகழ்கால வாழ்க்கையில் மிகக்குறைந்த காலம்தான் பணத்திலுைம் செல்வாக்கினலும் அவனு டைய புகழ் கணிக்கப்படுகிறது. கிரந்தரமாகக் கணிக்கப் படுகிற புகழ் என்னவோ, குணங்களாலும், பண்பாடுகளா லும், ஒழுக்கத்திலுைம் கணிக்கப்படுகிறது. -

செல்வமும், செல்வாக்கும் குணங்கள் அல்ல. குணங். கள்தாம் செல்வம் என்று நம்பி ஒப்புக் கொள்கிற புதிய சமுதாயம் உருவாக வேண்டும் என இலட்சியவாதிகள் எண்ணுத நேரமில்லை. பொது வாழ்விலும், சமூகத் தொண்டிலும் எளிமையும் சுமுகமான உறவுகளும் பயன் படுவதற்குப் பதிலாகப் பதவியும், போலி கெளரவமும் பயன்படுவதைக் கண்டு பல வேளைகளில் நாம் மனம் கோகி ருேம். சமூகத்துக்கு மெய்யாகவே தொண்டு செய்ய விரும்புகிற உண்மை மனிதர்கள் பென்சிலின் மருந்து போல அருமையாகவும் கிடைக்க முடியாத உயரமும் கொண்டு பயன்பட வேண்டியவர்களுக்கு எட்டி கிற்காமல் சுக்குப் போல எல்லா இடத்திலும், எல்லார்க்கும் எப்போ தும் எளிமையாகக் கிடைத்துப் பயன்படுகிற மனம் உள்ள வர்களாக இருக்க வேண்டும். ஆனால் இப்படிக் காட்சிக் கும், பழக்கத்துக்கும், எளிமையான மனிதர்களை இன் றுள்ள பொது வாழ்வில் நாம் மிக மிகக் குறைவாகவே: சங்திக்க முடிகிறது. ".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/129&oldid=598206" இலிருந்து மீள்விக்கப்பட்டது