பக்கம்:புதிய பார்வை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$34 புதிய பார்வை

அழைப்பதும் வெறும் சடங்காகிப் பொருளற்று கிற்கிறது. இதே சமயத்தில் புதிய சூழ்கிலேக்கு ஏற்ப நாம் உண்டாக் கிக் கொண்டிருக்கும் சில சடங்குகளைப் பற்றியும் சற்றே சிந்திக்கலாம்.

'ஒருவர் தலைமை வகித்துப் பொதுக்கூட்டம்போல் சிலர் மணமக்களை வாழ்த்தி மைக்"கில் பேசுகிற புதிய திருமண முறையில் சடங்குகளே இல்லை என்று நீங்கள் கூறினல் அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இந்தப் புதுமுறையிலும் சடங்குகள் உண்டு. ஆனால் இவை காகரிக மாக மாற்றப்பட்டிருக்கின்றன. மேசை, நாற்காலி, மைக், சொற்பொழிவாளர்கள். மாலே, எலுமிச்சம் பழம் என்று எவ்வளவோ பொருள்கள் இங்தப் புதுமுறைச் சடங்குக்கும் வேண்டுமே !

குத்துவிளக்கேற்றிக் கொட்டு மேளம் முழங்க முத்துப் பங்தலின் கீழ் முதுமக்கள் கி ன் று வாழ்ந்திட கிகழ்ந்த திருமணம், சினிமா பிளேட் சங்கீதம் அலறக் கண்ணுடிச் சட்டமிட்ட அடுக்குமொழி அலங்கார வாழ்த்துக்கள் படிக்கப் பெற, மின்சார வண்ண விளக்குகள் தேவைக்கும் அதிகமான வெளிச்சம்போட, இன்று புது விதமாகவும் கடைபெறுகிறது. இந்தப் புதுமுறைத் திருமணத்தில் சடங் குகள் இல்லை என்று சொல்லமுடியுமா? பழைய சடங்குகள் இல்லே என்று வேண்டுமானல் சொல்லலாம். சடங்குகளே இல்லை என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. தரை மட் உத்துக்கு வெட்டி விட்டாலும் முறிந்து கீழே மீதமிருக்கிற அடிமரத்திலிருந்து தளிர்க்கிற சில தாவர இனங்களைப் போன்றவைதாம் சடங்குகள். பழையவற்றில் காரணம் எதுவும் கமக்குப் புரியவில்லை என்பதற்காகச் சிலவற்றை மூடநம்பிக்கை என்று ஒதுக்குவோம். இன்றைய கிலேக்கு மட்டும் காரணம் புரிவதாயிருக்கிற சில புதிய சடங்குகளே மேற்கொள்ளத் தொடங்கி விடுவோம். இந்தப் புதிய சடங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/136&oldid=598220" இலிருந்து மீள்விக்கப்பட்டது