பக்கம்:புதிய பார்வை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 35

குகளின் காரணமாக நாம் அறிந்து கொண்டவற்றில் நமக்கே நம்பிக்கை குறையும்போது இவையும் மூடநம்பிக்கை களாகி நம்மை ஏமாற்றி விடுகின்றன.

ஒப்புக்காக

நமக்கு நம்பிக்கையின்றிப் பிறர் வற்புறுத்தலைத் திருப்திப்படுத்துவதற்காக என்று நாம் செய்கிற காரியங்க ளெல்லாம் ஒப்புக்காகச் செய்பவை என்ற பிரிவிலேயே அடங்கும். இப்படி நம்பிக்கையின்றிச் செய்கிற காரியங் களைக் குறிக்கத்தான் மூட நம்பிக்கை என்ற தொடரை காம் பல வேளைகளில் பயன்படுத்துகிருேமேயன்றி வேறு பொருளில் அன்று. -

உங்களுக்கு எந்தவிதமான உடல் நலக்குறைவுமின்றிப் பார்ப்பதற்கு நீங்கள் சோர்வாகத் தென்பட்டுக்கொண் டிருக்கிற சமயம் ஒன்றில் உங்கள் நண்பர்கள் உங்களை "நீங்கள் மிகவும் பலவீனமாகத் தெரிகிறீர்கள். ஏதாவது வைத்தியம் செய்துகொள்ளுங்கள்' என்று வற்புறுத் தலாம். சரியான உணவு இன்மை, சரியான தாக்கம் இல் லாமை, இரண்டுமே நமது சோர்வுக்குக் காரணம் என்று உங்களுக்குப் புரிந்திருந்தும் நீங்களே அதை மறந்து விட்டு ஒரு டாக்டரிடம் உடம்பைக் காண்பித்துக்கொண்டு பேதை போல் அவர் என்ன சொல்லப் போகிருரென்று எதிர் பார்த்து நிற்பீர்களே; அதுவும் ஒரு மூடகம்பிக்கைதான். சா ய ங் கால ம் மூன்று மணியிலிருந்து நாலரை. மணிக்குள் முப்பது நண்பர்கள் விட்டுக்குப் போய் முப்பது பேர் வீட்டிலும் காப்பி குடிக்கச் சொல்லிக் குடிக்க வைத்தபின் முப்பத்தோராவது நண்பர் வீட்டிலும் இனி வயிறு தாங்காது' என்று சொல்லி மறுக்கத் துணிவின்றி கிற்பீர்களே; அதுதான் மூடகம்பிக்கை. அதுதான் நீங்கள் உடன் கைவிட வேண்டிய சடங்கு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/137&oldid=598222" இலிருந்து மீள்விக்கப்பட்டது