பக்கம்:புதிய பார்வை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புதிய பார்வை

கதை பற்றிய இலக்கிய ஆராய்ச்சிகள், போன்றவற்றிலும், திறனாய்விலும், தரமான சிறுகதைகளே வெளியிடுவதிலும் விறுவிறுப்பாகக் கவனம் செலுத்தி வருகிறது. பெரும் பாலான பத்திரிகைகள் கதைகளை மட்டும்ே இட்டு கிரப்புவ தோடு இலக்கியப் பணி நிறைந்து விடுவதாக கினைக்கும் இந்த நாளில் புதிய சோதனைகளைச் செய்ய இலக்கியப் பத்திரிகைகள் கூடத் தயங்குதின்றன.

இன்று நாட்டின் அரசியல் பொருளாதார, சினிமா வேகங்கள்-கிதானமான போக்குள்ள பத்திரிகை அம்சங்களே ஊக்குவிக்கத் துணை செய்யவில்லை. ஒரு சினிமாப் பத்திரிகை இலக்கிய அம்சங்களில் எதுவுமே இன்றி வெளிவர முடியும் என்பதுபோல் ஓர் இலக்கியப் பத்திரிகை சினிமா அம்சங் கள் எதுவும் இன்றி வெளிவர முடியாது என்ருகிவிட்டது தற்கால நிலைமை, இலக்கியத்தின் புதிய பழைய துறை களில் ஆழ்ந்தகன்ற கவனம் செலுத்தும் பத்திரிகைகள் சிலவாவது வேண்டும். மொழியின் ஜீவாதாரமான பிரச்னை இது. விதை நெல் சேமித்து வைத்தால்தான் மறுபடி பயிரிட முடியும். இத்தகைய இலக்கியப் பத்திரிகைகள் மொழிக்கு விதை நெல்லைப் போன்றவை. நாளைய இலக்கிய முயற்சிகளைப் பயிர் செய்ய இவை உதவுவதைப் போல வேறெவையும் உதவமாட்டா என்ற உணர்வு நமக்கு இருங் தாலே நல்லது. . . . .

இலக்கிய ஏடுகளின் எதிர்காலம் -

தமிழ் இலக்கிய இயக்கம் இப்போது வளர்முகமாக இருக்கிறது. அங்கங்கே எழுத்தாளர் சங்கங்கள், வாசகர் பேரவைகள் தோன்றிப் புதுமை இலக்கியம் பற்றி ஆழ்ந்து சிந்திக்க முனைந்துள்ள காலம் இது. இந்தக் காலத்திலும் எதிர்காலத்திலும் இலக்கியத் தரமான பத்திரிகைத் 9** tớaù (Literary journalism). Q=irG5*ử #Tg Tairp

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/14&oldid=597971" இலிருந்து மீள்விக்கப்பட்டது