பக்கம்:புதிய பார்வை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி $39;

பிக்கைக்காரர்களாகவும் ஆஷாடபூதிகளாகவும் கற்பனை செய்து நாம் இகழ்கிருேமே-அதைப்பற்றி இரண்டு விநாடி ஆர அமரச் சிந்தித்துப் பாருங்கள். புதிய கொள் கைகள் உங்களுக்கு அப்போது புரியும். எதைப் போற்ற லாம் ? எதை இகழலாம்? என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். எவை போலிச் சடங்குகள்? இனிமேல். வருகிற தலைமுறையில் எவை மூடநம்பிக்கைகள்? என் பதைப் பற்றியும் நீங்கள் புதிய நோக்கோடு சிங்திக்கத் தொடங்குவீர்கள் அப்படி ஒரு புதிய சிந்தனையை இந்த மேடையில் இந்தப் பிரச்னையைப் பற்றித் தொடங்கி வைக் கிறபோது சமூதத்தின் எதிர்காலத்தைப் பற்றி கிறைந்த, நம்பிக்கைகள் எற்படுகின்றன. உங்களுக்கும்தான்; எனக் கும்தான். - -

பகட்டுக்காகச் செய்கின்ற ஆடம்பரங்களையும் மூடகம் பிக்கையோடுதான் சேர்க்கவேண்டும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு பத்துப் பைசாவுக்குத் தபால் கார்டு வாங்கி எழுதி அது விரைவில் போய்ச் சேரவேண் டும் என்பதற்காக அடையாறிலிருந்து மவுண்ட்ரோடு தபால் கிலேயத்துக்கு அதைக் கொண்டு போய்ச் சேர்ப் பதற்கு ஒரு பாண்டியாக் கார் சவாரியைச் செலவழித்துத் தபாலில் சேர்க்கிற மாதிரிப் பொய்ச் சிக்கனங்கள் பல உண்டு. சிக்கனத்தைக் காப்பாற்றுவதற்காகப் பயன் படுகிற ஊதாரித்தனத்தைப் பார்த்தும் நமக்கு அதன் மேல் வெறுப்புத்தான் ஏற்படுகிறது. -

நாகரிகம் சடங்குகளிலோ, ஆடம்பரங்களிலோ இல்லை. கியாயத்தையும், கருணையையும் மதித்துப் பண்போடு வாழ் கிற ஏழையும் நாகரிகமாக இருக்க முடியும். பண்பற்று வாழ்கிற செல்வந்தரே மற்றவர்க்கு அநாகரிகமாகத் தோன் றவும் இடமுண்டு. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/141&oldid=598230" இலிருந்து மீள்விக்கப்பட்டது