பக்கம்:புதிய பார்வை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | 4 || |

ஆனல் இந்த விதத்தில் பழகும் முறை மட்டுமே முழுமை: யான இங்கிதம் ஆகிவிடாது. இங்கிதம் என்ற பகுப்பினுள் இப்படிப் பழகும் முறையும் ஒர் அங்கமாகி கிற்க முடியும். சுற்றி சிற்பவர்களின் பார்வை, பேச்சு, முகம், இவற்றை ஒரு விநாடியில் எடை போட்டுவிடுகிற கூர்மையான உணர்ச்சியைச் சிலர் இயல்பாகவே பெற்றிருப்பார்கள். இப்படி துட்பமான மதியுள்ளவர்களுக்கு உலகம் பலவிதங் களில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. ஒரு மனிதனே அரை விநாடி நேரத்தில் அளந்து புரிந்துகொண்டு தீர்மானம் செய்து விடும் வல்லமை இவர்களுக்கு இருக்கும். இவர்களுடைய கண்களும் மனமும், சிங்தனையும் துறுதுறு வென்றிருக்கும். எங்தக் காரியமும் மந்தமாக நடைபெறு வதை இவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. ஒரு காரியம் மங்தமாக நடைபெறுவதைத்தான் மன்னிக்க முடியாது. ஆல்ை நிதானமாக நடைபெறுவதை ஒப்புக் கொள்ளலாம். மக்தம் வேறு; கிதானம் வேறு, கிதானம் என்பது குணம். மந்தம் என்பது குற்றம். உலகத்தில் கியாயமாக அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு குணத்துக்கும். எதிர்த் தரப்பினதாக ஒவ்வொரு குற்றமும் இருக்கும். கிதானம் என்ற குணத்துக்கு எதிர்த்தரப்பில் மந்தம் என்பது குற்றம். - . . . . . . . . . கிதானமாக இருக்க வேண்டிய இடத்தில் நிதானமாக இல்லாதது ஒரு குற்றம். நிதானமாக இல்லாததோடு மக்தி மாயிருப்பது மற்ருெரு குற்றம், பிறரோடு பழகும் முறை

யில் மிக மென்மையான பல குணங்கள் சேர்ந்ததோர்.

உயர்ந்த கிலேதான் இங்கிதம். இந்தக் குணத்துக்கும், படிப்

புக்கும் ஒரு விதமான தொடர்பும் இல்லை. படித்தவர்கள் பலர் சிறியதளவும் இங்கிதம் தெரியாதவர்களாக இருப் பதையும் எங்த விதத்திலும் படிப்பில்லாத பலர் கன்ருய் இங்கிதம் தெரிந்தவர்களாக இருப்பதையும் உலக வாழ்க் கையில் கண்கூடாகக் காண்கிருேம். சுற்றுப்புறத்தை உணர்ந்து வாழ்வதே ஒரு பெரிய படிப்புத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/143&oldid=598234" இலிருந்து மீள்விக்கப்பட்டது