பக்கம்:புதிய பார்வை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி (49.

கிறவர்கள், அல்லது கேட்கத் தயாராயிருக்கிறவர்கள், மிக மிகக் குறைவாகிப் போய்ப் பேசுகிறவர்கள் தொகை அதிக மாகி விடும் காலத்தில் நிகழ்ச்சிநிரலிலே கேட்கிறவர்கள் பெயரை மட்டும் அச்சிடுவதுதான் பொருத்தமாயிருக்கும். இப்போது இருக்கிற சூழ்நிலையைப் பார்த்தால் அப்படியும் ஒரு காலம் வரும் போலத்தான் தோன்றுகிறது. தினசரிப். பத்திரிகைகளில் ஏதாவது ஒரு பக்கத்தில் ஏதாவது ஒரு மூலயில் இன்றைய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் என்று சிறிய எழுத்துக்களில் மங்கலாக அச்சிடுவதற்குப் பதில் இன்றைய. சொற்பொழிவு நிகழ்ச்சிகளை மட்டும் அச்சிட்டாலும் அதுவே ஒரு முழுப் பத்திரிகையை நிரப்பிவிடும் என்பது போல் இருக்கிறது சூழ்நிலை. அவ்வளவு அதிகமான கூட் டங்கள் காள்தோறும் நடைபெறுகின்றன. . . . . . . .

குதிரைப் பங்தயத்துக்கு ரேஸ் டிப்ஸ் வெளியீடுகள் மாதிரி சொற்பொழிவுகளுக்கும் தனித்தனி வெளியீடுகள் வரலாம். இன்ன குதிரை வெற்றிபெறும், இன்ன குதிரை வெற்றிபெருது என்று பக்தய முடிவுகளைப் பற்றி ஹேஷ்யம் கூறுவதைப்போல இன்றைய தினம் பேச்சில் இன்னர் வெற்றி பெறுவர்-இன்னர் வெற்றிபெற மாட் டார்-என்று சொற்பொழிவுக் குதிரைகளுக்கு (வேகமாகப் பேசும் ஆவேசப் பேச்சாளர்களுக்கு இந்தப் பெயர் மிக மிகப் பொருங்தும்) ஹேஷ்யம் கூறும் வெளியீடுகளும் 5.1 Is Göstry. - , ... ! । கூட்டம் பலவிதம் ... -- . . . . . . . . . . . . . . . . . . . .”

இங்த நாட்களில் பொதுக்கூட்டங்கள் பலவகையாக நடைபெறுகின்றன. இலக்கியக் கூட்டம், அரசியல் கூட்டம், பாராட்டுக் கூட்டம், கண்டனக் கூட்டம், அதுதாபக் கூட்டம் என்று பேர்கள்தாம் வேறு வேருக இருக்கின்றன. எல்லாக் கூட்டத்துக்கும் பேசுபவர்கள் உண்டு என்பது மட்டும் சர்வ நிச்சயம் கேட்பவர்கள்?...இந்த இரண்டா வது தேவையைப் பற்றி மட்டும் கிச்சயம் சொல்லமுடியாது. ஏனென் ருல் பேசுகிறவர்களேவிடக் கேட்கிறவர்களுக்குச் சுதந்திரம் அதிகம். பேசுகிறவர்கள் கூட்டத்துக் கண்டிப் பாக வங்துதான் ஆகவேண்டும். கேட்கிறவர்கள் அப்படி இல்லை. ஒரு கூட்டத்துக்கு ஆர்வத்தோடு வந்து கேட்பதில் அவர்களுக்கு எத்தனே சுதந்திரம் உண்டோ, அத்தனை சுதந்திரம் வந்து கேட்காமல் புறக்கணித்து விடுவதிலும் , - I 0. - و” . » ኀ•

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/151&oldid=598250" இலிருந்து மீள்விக்கப்பட்டது