பக்கம்:புதிய பார்வை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | 5 || |

கதைகள் முக்கிய நோக்கத்தின் சுவையைக் குறைத்தும் விடலாம். f பேச்சுக் குழப்பம்

சில கூட்டங்களில் பேச்சாளர்களேச் சகித்துக்கொள்ள முடியாமல் கேட்பவர்கள் குழப்பம் விளைவிப்பதைப் போல் கேட்பவர்கள் புரிந்துகொள்ள வழியின்றிப் பேச்சாளர் களே குழப்பம் விளேவிப்பதும் உண்டு. ஒன்றரை மணி நேரத்துக்குள் கடத்தி முடிக்கவேண்டிய ஒரு கூட்டத்தில் "வரவேற்புரை கூற வேண்டியவரே முக்கால் மணி நேரத்தை வீணுக்கி விட்டால் தலைமையுரை சொற்பொழிவு கள், நன்றியுரை எல்லாவற்றையும் திட்டமாகச் செய் வதற்கு நேரம் இல்லாமல் போய்விடும். வரவேற்புரை கூறுகிறவர் தம் நீண்ட வரவேற்புரையைக் கூறி முடிப்ப தற்குள் தலைவர் தமக்கு அணியப்பட்ட முழுளே ரோஜாப்பூ மாலையை ஒவ்வோர் இதழாக மென்று தின்று விடலாம் போல் அவ்வளவு நேரம் செலவழியும். வரவேற்புரை கூறிக் கொண்டிருக்கும்ப்ோதே திரும்பிப்போய் விடலாம் போலக் , கூட்டத்தினரை அலுக்கச் செய்து விடுவார்கள் சில வரவேர்ப்பு (இப்படிப்பட்ட வரவேற்பு உரையாளர்கள் பேசப் பேசக் கூட்டத்தினருக்கு வேர்த்துக் கொட்டு மாதலால் இவர்கள் செய்வதை வரவேர்ப்பு என்றே கூறி. விடலாம்!) உரையாளர்கள். இதே அலுப்பை நன்றி. கூறலே நீட்டி முழக்கும் சிலரும் செய்யமுடியும். கன்றியை அதிகமான வார்த்தைகளால் புகழ்ந்து சொல்வதே அதன் கெளரவத்தை குறைப்பதாகும் என உணர வேண்டாமோ? எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே சொல்ல எண்ணுகிறேன். நல்ல தை மாதத்து வெள்ளிக்கிழமை காளில் மாதர் சங்கக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்கு ஒரு பேராசிரியரை அழைத்திருந்தார்கள். பேச்சைக் கேட் பதற்குக் கூடியிருந்த அத்தனைபேரும் சுமங்கலிகள். பேரா. சிரியரோ கொஞ்சம் அசடு. "சகோதரிக ளே! திலகமிழங்து திருமாங்கல்யமுமின்றி. மூளிக் கைகளோடு பிச்சைக்கு வரும் அநாதைப் பெண்களைப் பார்க்க நேரும்போது எல்லாம். எனக்கு உங்கள் சங்கத்தின் பணிகள் கினேவுக்கு வரும். கமது நாட்டில் ஒரு காலத்தில் பெண்மைக்கு எவ்வளவு பெருமை இருந்தது?" என்று பூேச்சைத் தொடங்கிய. போதே சிவ, சிவா! தை வெள்ளிக்கிழமையும் அதுவுமாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/153&oldid=598254" இலிருந்து மீள்விக்கப்பட்டது