பக்கம்:புதிய பார்வை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H52 புதிய பார்வை

விளக்கேற்றுகிற நேரத்தில் இந்த அமங்கலமான பேச்சைக் கேட்பதற்காகவா காம் இங்கே வங்தோம்?' என்று கூடி யிருப்பவர்கள் கூசும்படி எவ்விதமாகவோ பேச்சைத் தொடங்கினர் அவர். இப்படிச் சக்தர்ப்பத்துக்கும் இடத் துக்கும் பொருந்தாமல் தொடங்கப்படுகிற பேச்சு-வெறுக் கப்படும். நல்ல ஆரம்பம்-கணிசென்ற எடுப்பு-இவை: ஒரு சிறந்த சொற்பொழிவுக்கு முதலில் வேண்டிய அடை tf fff GiffHf356 T.

கூட்டத்தில் தான் பேசவேண்டிய பொருளேப் பற்றி முழுவதும் மறந்துபோய் விட்டுத் தனக்கு முன் பேசியவர் தம் பேச்சில் விட்டுப் போயிருந்த பிரச்னைகளே எடுத்துக் கிண்டிக் கிளறி அலுத்துக்கொள்கிற பேச்சாளர்களும் உண்டு. மேலே கூறிய மாதர் சங்கத்தில் அந்தப் பேராசிரி யர் தை வெள்ளிக்கிழமையும் அதுவுமாக இப்படிப் பேசிய நிகழ்ச்சிக்குப் பின் அச்சங்கத்தில் ஆண் பிள்ளைகளையே பேசக் கூப்பிடுவதில்லை என்று தீர்மானம் செய்து விட்டார் கள். பின் வேறென்ன செய்வார்கள்? தடுமாறும் சொற்கள்

பொதுக்கூட்டங்களில் பேசும்போது சில கற்றுக் குட்டிப் பேச்சாளர்கள் என்ன சொல்லைச் சொல்லுகிருேம் என்பதையே உணராமல் தடுமாறிப் போய்ப் பேசுவ: துண்டு.

இத்துடன் நான் பேச எடுத்துக்கொண்ட காலம் முடிந்து விட்டதல்ை என் பேச்சை மூடித்துக் கொள் கிறேன்" என்று சொல்லவேண்டிய இடத்தில், இத்துடன் என் காலம் முடிந்து விட்டதல்ை சொற்பொழிவை முடித்துக் கொள்கிறேன் என்று சொல்லிக் கூட்டத்தைத் திணற அடித்தார் ஓர் இளேஞர், இன் மை லாஸ்ட் டேய்ஸ்' என்று பதவி விலகிப் போகும் ஒருவர் ஆங்கிலத் தில் தொடங்கிய பேச்சை அருகிலிருந்த மொழிபெயர்ப் பாளர், "எனது இந்த அந்திம நாட்களில் என்று மொழி பெயர்த்துப் பேசியவர் ஏதோ மாணப் படுக்கையிலிருந்து கொண்டு பேசுவதைப் போன்ற களையை உண்டாக்கினர். இன்னெரு கூட்டத்தில் ஊரெல்லாம், இப்படிப் பிரஸ் தாபமாக இருக்கிறது என்பதைச் சொல்லவந்த பேச்சாளர் ஒருவர் வாய் குழறி, ஊரெல்லாம் இப்படிப் பிரசவமாக இருக்கிறது என்று சொல்லிக் கூட்டத்தில் இருந்தவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/154&oldid=598256" இலிருந்து மீள்விக்கப்பட்டது