பக்கம்:புதிய பார்வை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி i53

கொல்'லென்று சிரிக்கும்படி செய்தார். இன்னும் இப்படி எத்தனே எத்தனையோ தடுமாற்றங்கள் நிகழ்வதுண்டு. ஒருவர் காலஞ்சென்றதை யொட்டி நடைபெற்ற அதுதாபக் கூட்டம் ஒன்றில் இப்படி ஒரு குழப்பத்தைப் பேச்சாளர் ஒருவர் உண்டாக்கினர். அந்தப் பாழாய்ப்போன பேச் சாளருக்குக் காலஞ்சென்றுவிட்ட பிரமுகரின் பெயரைக் காட்டிலும் அவருக்காகக் கூட்டிய அதுதாபக் கூட்டத்துக் குத் தலைமை வகித்துக்கொண்டிருந்த பிரமுகரின் பெயர் தான் கன்ருக கினேவு இருந்தது. எனவே குறிப்பிட்ட பேச்சாளர் பேசும்போது, இன்றைக்குக் காலம் சென்ற..." என்று தொடங்கி உயிரோடு குத்துக்கல்லாய் காற்காலியில் வீற்றிருந்த தலைவரின் பெயரைச் சொல்லிவிட்டார். அந்தப் பேச்சாளர் இப்படி வாய் குழறி இரண்டு மூன்று முறைகள் சொல்லிய பின்பே கூட்டத்தில் சிலர் சிரித்தும், சிலர் முகத்தைச் சுளித்தும் ஆரவாரப்படுத்திப் பேச்சாளரை எச்சரித்து அவருக்குத் தன் கினேவுவரச் செய்தார்கள். * -

வேறு சில பேச்சாளர்கள் ஏதோ ஒர் அர்த்தத்தில் கினைத்து எதோ ஒர் அர்த்தத்தில் வாக்கியத்தைக் குழப்பிப் பேசி விடுவார்கள். -

'பயனில சொல்லாமை என்பது ஒரு குற்றம் என்று திருவள்ளுவர் கூறியிருப்பது உங்களுக்கெல்லாம் தெரியும் என்று ஒருவர் கூட்டத்துப் பேச்சின் அவசரத்தில் சொல் லும் வாக்கியமானது ஒழுங்கான அர்த்தத்தில் அமைய வேண்டுமானல் பயனில் சொல்லுதல் என்பது ஒரு குற்றம் என்று திருவள்ளுவர் கூறியிருப்பது உங்களுக்கெல்லாம் தெரியும்' என்று இருக்கவேண்டும். உற்று உணர்ந்தால் தான் இங்தப் பிழைகள் எல்லாம் தெரியும். - எப்போது முடியும் ! - -

குறிப்பிட்ட நேரத்துக்குக் கூட்டம் தொடங்கப்பெருத பட்சத்தில் 'அது எப்போது தொடங்கும்' என்று பேச்சுக் கேட்க வந்தவர்கள் காத்திருப்பார்கள். ஒவ்வொரு பேச் சாளராய்த் தத்தம் கருத்துக்களேக் கேட்பவருடைய மண்டையில் கனக்கச் செய்தபின் கூட்டம் எப்போது

முடியும் என்று எல்லார் மனத்திலும் ஆவல் எழும். இந்த

இரண்டு கேள்விகளில் முதலாவது கேள்வி ஒரு கூட்டத்தின் துணி. இரண்டாவது கேள்வி ஒரு கூட்டத்தின் மறு துணி, காகரிகமடைந்துவிட்ட புதிய சமுதாயத்தின் அன்ருட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/155&oldid=598258" இலிருந்து மீள்விக்கப்பட்டது