பக்கம்:புதிய பார்வை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | 5

நீடித்த கலனைத் தராது, நடைமுறை உலகத்துக்குப் பயன் தரக்கூடிய கம்பிக்கைகளையும், உழைப்பையும் மறக்கச் செய்கிற எங்தக் கலையும் அபினியைப் போன்றதுதான். பரிசுத்தமான கலைகள் என்பவை தேசத்தின் கிரங்தரமான புகழைத்தாங்கும் தாண்களைப் போன்றவை. துரண்கள் தளர்ந்துபோய்க் கட்டையை முட்டுக் கொடுப்பது போன்ற: பலவீனமான புகழ்ச்சிகள் புராதனமானதொரு தேசத் துக்கு குறைவு தருவனவே. . .

எடுத்துக் காட்டாக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க். கலாம். ஒரு மில் முதலாளியின் மகள் தன்னுடைய கல் லூரியில் படிக்கும் மத்தியதரக் குடும்பத்து இளைஞன் ஒருவனே மணக்க விரும்புவதாக இடைவேளை வரை ஒடுகிற: திரைக் கதை-இடைவேளைக்குப் பிறகு திடீரென்று கிகழ்ச் களால் விரைவாக கிறைந்து ஒடி அதே மத்தியத்தாக் குடும். பத்து இளைஞன் குபேரசம்பத்துக்கு அதிபதியாகி விரும்பிய பெண்ணையே மணந்து கொள்வதாக முடிகிறதென்று. வைத்துக் கொள்வோம். படத்தின் நீளம், ஒடுகிற கால அளவு, படிப்படியான நிகழ்ச்சிகள் இவற்றுக்கு ஏற்றபடி சுகதுக்க ஏற்றத் தாழ்வுகள் அமைக்கப்படாமல் எனே தானே எ ன் று அமைக்கப்பட்டிருந்தால் பார்க்கிறவர் களுக்கு வாழ்க்கையைப் பற்றியே. பொய்யான கம்பிக்கை ஏற்பட்டு விடும். - - , ' ..

முறையுள்ள படிப்படியான உழைப்பையும் படிப்படி: யான முயற்சிகளையும் இணைத்துக் காட்டாமல் செப்பிடு: வித்தையைப் போலப் பிரமையான சுகங்களே முன் நிறுத்திக் காட்டும் கலேகளால் கிரந்தரமான குணங்கள் பாதிக்கப்படும் பள்ளி, கல்லூரி மாணவர்களும். இளேஞர்" களும், பிறரும், இப்படிப் பிறழ உணர்வதன் காரணமாகச் சமூகத்தை இவர்கள் மதிக்கிற விதமே போலித்தன்மை உள்ளதாகி விடுகிறது. போலியாக மதிக்கப் பழகிக். கொள்ளும் பல பழக்கங்கள் நாகரிக உலகிற்குத் தேவை என்று இன்றைய நிலையில் கருதப்பட்டாலும் அப்படிப் பட்ட மதிப்பு ஒரு தொற்றுநோய் சமூகத்தில் நியாயமும், சத்தியமும் காற்றுப் பட்டுப் பட்டுக் கரையும் கற்பூரம்: போலப் படிப்படியாகக் கரைவதற்குத் துணை நிற்பது. இங்தப் போலி மதிப்பீடுதான். வேகமான சுகதுக்கங்கள் இன்றைய வாழ்க்கையில்.மனிதனுடைய உடலயும் பாதிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/159&oldid=598266" இலிருந்து மீள்விக்கப்பட்டது