பக்கம்:புதிய பார்வை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 8 புதிய பார்வை

படைப்புக்கள் பிரபலப்படுத்தப்படுகின்றன. எழுத்தாள லுக்குள் குறிப்பாகத் தமிழ் நாவலாசிரியனுக்குள் தேசிய ஒளி அவிந்து விட்டதோ என்று பயப்பட வேண்டியிருக் கிறது. சமீபத்தில் வெளிவந்துள்ள ராஜம் கிருஷ்ணனின் "அமுதமாகி வருக நாவல் ஒரளவு கம்பிக்கையளிக்கிறது. ஒரு சமூக நிலையை யதார்த்த பூர்வமாகச் சித்தரிக்கும் முயற்சியில் நீல. பத்மநாபனின் "தலைமுறைகள்' என்ற புதிய நாவலேக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தமிழ்த் திரைப் படத்தைப் போலவே தமிழ்ப் புதினமும் ஒரு வட்டத்தி லேயே சுற்றிச் சுற்றி வராமல் காப்பாற்றப்பட வேண்டும். பல தமிழ் நாவலாசிரியர்கள் அரசியல், பொருளாதார, விஞ் ஞான நிலைமைகளால் இன்னும் பாதிக்கப்படாமலேயே இருந்து வருகின்றனர். --

சமீபத்தில் ஒரு பெரிய தமிழ் நாவலாசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஐந்து முறை நாவல்களுக்கான பரிசும், ஒருமுறை சிறுகதைக்கான பரிசும் வாங்கியவர். பார்மோஸாவையும், கிழக்கு ஜெர்மனியையும் நமது நாடு அங்கீகரித்துத் தூதரக உறவு வைக்கவில்லை என்ற விஷ யமே அவருக்குத் தெரியவில்லை. வார்ஸா உடன்படிக்கை நாடுகள் பற்றியும், என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண் டார் அவர். இதல்ைதானே என்னவோ இருபத்தைங்து வருஷங்களாகக் காதலித்துக் கொண்டே இருக்கிருர்கள் தமிழ் நாவலின் கதாநாயகர்கள். மக்கள் தொகையும் பெருகிவிட்டது. பாவம். சமகாலத்திய சமூகப்ரக்ஞை இல் லாமல் தமிழ் நாவலாசிரியர்களும் காலந்தள்ளுகிருர்கள். தமிழ் வாசகர்களும் சரித்திர காவல் என்ற கனவுலகிலேயே சஞ்சரிக்க ஆசைப்படுகிருர்கள். இருவருக்குமே சமூகப் .பிரக்ஞை இல்லை, -

1947க்கு முன் அங்கியனிடமிருந்து சுதந்திரம் பெறும் ஒரேபோராட்டம் மட்டும்தான் இந்தியாமுழுதும் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/20&oldid=597983" இலிருந்து மீள்விக்கப்பட்டது