பக்கம்:புதிய பார்வை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 19

அதைப் பற்றி பங்கிம் சங்திரர், சரத் சங்திரர், தாகுர், கல்கி எல்லாரும் காவல் எழுதியிருக்கிருர்கள். புகழ் பெற்ற "வங்தேமாதர கீதமே அப்படி ஒரு நாவலிலிருந்துதான் கிடைத்தது. 1947க்குப் பின் பெற்ற சுதந்திரத்தை யார் ஆளுவது என்ற போட்டியில் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி கள், (சுதந்திரம் பெறுமுன் இல்லாமல், பெற்ற பின் உண் டான கட்சிகள் கூட) பல போட்டியிடுகின்றன; வெல்கின் றன. தோற்கின்றன. வென்றும் தோற்கின்றன. தோற் றும் வெல்கின்றன. இத்தகைய கிலேகளேப் பற்றி ஒரு பூரணமான காவல் எழுத எங்த ஒரு நாவலாசிரியணுவது இது வரை தமிழில் முன் வங்திருக்கிருன? அணேக்கட்டுப் பிர தேச வாழ்வை வைத்து ராஜம் கிருஷ்ணன் 'அமுதமாகி வருக நாவலே எழுதியது போல நமது மாபெரும் தொழிற் கூடங்கள் பற்றி, கடற்கரைப் பிரதேசம், விவசாயப் பகுதி கள் பற்றித் தமிழில் நாவல்கள் உண்டா? இல்லை, இல்லை. கவிதைகள் மூலம் பாரதியும் உரைநடையின் மூலம் கல்கி ஆயும் செய்த மாறுதலே இன்று காவலின் மூலமாகத் தமிழகத் துக்குச் செய்ய ஒரு நாவலாசிரியன் இல்லேயே என்பதுதான் என் குறை அல்லது மனத்தாங்கல். பட்டாளத்தில் சேரும் ஒரு சாதாரண மலையாளியின் வாழ்வில் தொடங்கி அற் புதமான ராணுவ காவலாக விரியும் பாரப்புரத்துவின் 'இரத்தக் கறை படிந்த அடிச் சுவடுகள்' போலவோ, நாயர் தரவாட்டுக் குடும்பத்தின் கால மாறுதலைச் சித்திரிக்கும் கேசவதேவின் "அண்டை வீட்டார்' போலவோ, கங்கைப் படுகையில் களிமண் எடுத்துப் பொம்மை செய்யும் சிறுவ னின் வாழ்வு வளர்ச்சி மூலமே தேச வரலாற்றுத் திருப்பங் களே அழகுறக் கூறும் தாராசங்கர் பானர்ஜியின் பஞ்ச மூர்த்தி போலவோ ஒரு தமிழ் நாவலே இன்னும் கான் படிக்கமுடியவில்லையே என்ற வருத்தத்தோடுதான் இதை எழுதுகிறேனே ஒழிய அழுகுணிச்சித்தராக நின்று பெளி. மிலம் பேசுவதற்காக அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/21&oldid=597985" இலிருந்து மீள்விக்கப்பட்டது