பக்கம்:புதிய பார்வை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 29

பிணியும், மெலிவும் பகையும், வஞ்சமும், அச்சமும், பொரு மையும், கொடுமையும், நலிவும் இன்றி நினைத்த மாத்தி ரத்தே போகங்கள் யாவும் கைகூடும் சத்திய யுகமென்றும் கிருதயுகத்துக்கு நமது நூல்கள் இலட்சணம் கூறுகின்றன. இந்த இலட்சணங்களேயே பாரதி புதிய தமிழில் சுதேசித் தமிழில் வேறு விதமான மொழிகளில் இப்படிக் கூறு கிருன். எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தி யாவர்க்குமான நெறியும் செயல்களும் சமமாகி கிற்கும் அந்த யுகத்தை, எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஒர் கிறை எல்லாரும் இங்காட்டு மன்னர் என்றெல்லாம். வேறு இடங். களில் கூறியிருந்தாலும் ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சிக் குப் பின் புதிய ருஷ்யாவைப் பாடும்போது சிறப்பாகக் கிருதயுகத்தைப் பற்றிக் கூறுகிருன் பாரதி.

"குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு

மேன்மையுறக் குடிமைதிே - . கடியொன்றி லெழுந்தது.பார் குடியாசென்று

உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லே யாருமிப்போது

அடிமையில்லே அறிய என்ருர் இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்

கிருதயுகம் எழுக மாதோ'

என்று அடிமைத்தனத்தின் வீழ்ச்சியைக் கலியின் வீழ்ச்சி யாகவும், சுதந்திரத்தின் எழுச்சியைக் கிருதயுகத்தின் எழுச்சியாகவும் பாடுகிருன் பாரதி. இப்படி ஒரு விடுதலை, இப்படி ஒரு எழுச்சி தமிழ் மொழிக்கும். தமிழ்க் கவிதைக் கும் பாரதியினல் கிடைத்துவிட்ட பெருமையைத்தான் தமிழ்க் கவிதையின் 'கிருதயுகம்' என்று கொண்டாடு கிருேம் நாம். கவிதையின் வனப்புப் பொருங்திய உரை கடையும், உரைநடையின் எளிமை பொருங்திய கவிதையும் இந்தக் கிருத யுகத்திலே தமிழுக்குக் கிடைத்திருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/31&oldid=598005" இலிருந்து மீள்விக்கப்பட்டது