பக்கம்:புதிய பார்வை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 3r

எல்லாம் அவனுடைய கவிதைகளில் கிடைக்கின்றன. இத்தனே சுதந்திரங்களையும், விடுதலைகளையும் ஒரே சமயத். தில் கேர்கிற ஒரு கவிதையைக் கிருதயுகமாகக் கொண்டா டாமல் இருக்க முடியுமா ? இந்த தேசத்தில் அங்தக் கால கட்டத்தில் வேறெங்த மாநிலங்களிலும் இப்படி ஒரு மகா கவி தோன்றவில்லை என்று அடித்துச் சொல்லலாம் நாம் ஏதோ ஒரிரு துறைகளில் அப்படிப்பட்ட சிறப்பின் ஒரு பகுதியை உடைய கவிகள் வேறு பகுதிகளில் தோன்றி: யிருக்கலாம். ஆனால் தேசிய சமய, சமூக சீர்திருத்த இலட் சியங்கள் யாவும் இணைந்த ஒரு மகா கவியாகப் பாரதி ஒரு வனே நேர்ந்தான் என்று தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள முடிவதைப் போல் வேறெவரும் இந்தப் பரங்த பாரத தேசத்தில் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. இனி இந்த அடிப்படையில் பாரதியின் சாதனைகளையும் அதற்கு முன்னும் பின்னும் தமிழ்க் கவிதையின் கிலேகளே யும் ஒரளவு ஆராயலாம். முன்னிருந்த கிலே என்ன? பின் விளேயும் வி இள வு க ள் ய ர ைவ என்பதை வைத்தே. ஒரு மகாகவியின் இன்றியமையாமையை நாம் சரிவரக் கணிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும்,

பாரதிக்கு முன்: அகத்தியம், தொல் காப்பியம் தொடங்கி, மிகச் சமீப காலத்து நூலாகிய விசாகப் பெரு. மாளேயர் யாப்பணி இலக்கணங்கள் வரை தமிழ்ச் செய்யு. ஞக்கு இலக்கணம் வகுத்த நூல்கள் பலவாகும். காலகதிக்கேற்பப் புதிய 'பா இனங்களுக்கும், வழுவமைதிக்கும், புறனடைகளுக்கும், விதிவிலக்குகளுக்கும் ஒவ்வோராசிரிய ரும் இடம் கொடுத்தே இலக்கணம் செய்திருக்கிருர்கள். ஆல்ை இவை எல்லாம் செய்யுளுக்கும், பாக்களுக்கும், பா இனங்களுக்கும்தான் இலக்கணம் கூறினவே ஒழியப் புது யுகத் தமிழ்ச் சொல்லாக அர்த்தபூர்வமாகப் பயன்படுத்தப் படும் கவிதை' என்ற சுதந்திரமான ரூபத்திற்கு இலட்சணம் சொல்லவில்லை. தமிழ் மொழியில் இந்தக் கவிதை என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/33&oldid=598010" இலிருந்து மீள்விக்கப்பட்டது