பக்கம்:புதிய பார்வை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 33.

Α

வும், கவிதைத் தன்மையைப் பொலிய வைக்க ஏற்றதாகவும் கம்பன் அனறு தேர்ந்தெடுத்த விருத்த நடையே இன்றை. யத் தமிழ்க் கவிதையின் பெரும்பான்மையாகிவிட்டதைக் கவனிக்க வேண்டும். விருத்த கடையின் வேறுவேறு அம் சங்களாகிய கிளிக்கண்ணிகள் சித்தர் பாடல் நடைகளே, இன்று விருத்தத்திற்கு அடுத்தபடி எளிய கிலேயிலுள்ளன. ஒரு மகாகவி தனக்குரியதெனத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வடிவம் பின்னர் வரும் பல தலைமுறைகளில் கூட மாருமல் கின்றுவிடுவதும் உண்டென்பதைத்தான் இது கமக்குக் காண்பிக்கிறது. கவியின் விக்வரூபத்தை முழுமையாகக் காட்டுவதற்குப் பரிபூரணமாக ஏற்றது என்பதை நுனுகி. உணர்ந்தோ என்னவோ திருத்தக்க தேவரின் சிந்தாமணி, விருத்த நடையையே இன்னும் இலகுவாக்கி ஒரு புதிய வனப்பு மிக்க விருத்த கடையைத் தனக்கென உண்டாக்கித் கொண்டான் கம்பன். அதே விருத்த கடை இன்னும் எளிமையாக, நேருக்கு கேர் பேசுவது போன்ற கம்பீரத் துடன் பாரதி காலத்தில் உருவாகியது. சித்தர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், ஆகியவற்றின் வடிவங்களும், முறைகளும் கூடப் பாரதியிடம் புத்துருப் பெற்றிருக்கின் றன. சமூகத்தன்மைகளுக்கும் இலக்கியத்திற்கும் கவின . காலத்தில் தொடர்பு அதிகமாக அதிகமாகக் கவிதையின் சகாதனத் தன்மை மாறிச் சமதர்மத் தன்மை அடைந்த்ே தீர வேண்டியிருக்கிறது. நவீன காலத்தில் மனிதனின் கற்பனைகள் எண்ணங்களே இணைக்கும் பாலமாக வசனநடை வலுப்பெற வலுப்பெறக் கவிதையின் சாதனத் தன்மை மாறிக் கொண்டே வரவேண்டிய அவசியமும் கிர்ப்பந்தமும் எற்பட்டு விட்டது. இது தமிழ் காட்டிலோ, இந்தியா விலோ மட்டும் ஏற்படுகிற மாறுதல் இல்லை. உலகம் முழு வதும் நவீன சமூகத்தையும், அதன் எண்ணங்களையும் சொற்களையும். இணைக்கும் சாதனமாக வசனம் வந்துவிட் புது, பாரதிக்கு முன்னர் இந்தப் புதிய கிலே தமிழைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/35&oldid=598014" இலிருந்து மீள்விக்கப்பட்டது