பக்கம்:புதிய பார்வை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புதிய பார்வை

பாதிக்கவில்லை, சங்க காலம், காப்பியக் காலம், இடைக் காலம், பிரபங்கங்கள், ஆழ்வார் நாயன்மார் பாடற்காலம், தனிப்பாடற் காலம், ஆகிய பல காலங்களிலும் தமிழிலே மேலோங்கியிருந்தவை பாக்களே ஆகும். அவற்றில் எல் -லாம் கவிதைத் தன்மைகளேவிட வடிவத்திற்கும் முறைக் கும், யாப்பமைதிக்குமே முக்கியத்துவம் உண்டு என்பதில் எள்ளளவும் சங்தேகம் கிடையாது. வடிவத்திற்கும் முறைக்கும், யாப்பமைதிக்கும். முக்கியத்துவம் தராத தனிக் கவிதைத் தன்மைகளே அக்காலத்திற் கவிதைகளாக ஒப்புக் கொள்ளப்படவில்லே.

'வடாஅது பனிபடு கெடுவரை வடக்கும் குளு அது உருகெழு குமரியின் தெற்கும்'

என்று கூறிய புறப்பாட்டிற்கும்.

லேத் திரைகடல் ஒரத்திலே கித்த நின்று தவம் செய்யும் குமரியன்னை வடமாலவன் குன்றம் இவற்றினிடையே புகழ் மண் டிக் கிடக்கும் தமிழ் காடு

என்ற பாரதியின் நவயுகக் கவிதைக்கும் பொருள் ஒன்ரு யிருக்கலாம். ஆனல் வடிவம், முறை, யாப்பமைதி, இவை களில் எல்லாம் கிறைய மாறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன.

பொருட்செறிவு, என்ற ஒன்றைப் பழங்காலக் கவி களும், புலவர்களும், அளவற்று விரும்பியதால் கடினபதங் களையும், திரிசொற்களையும், செய்யுள் விகாரச் சொற்களை யும், தொகுத்தல், வலித்தல், மெலித்தல் விகாரங்களயும் பயன்படுத்திக் குறைந்த சொற்களில் அதிகப் பொருளை விளக்கும் செப்பிடுவித்தை (அன்று அது செப்பிடு வித்தை யல்ல, இன்று என்னவோ இந்த நவீன சமுதாயத் தன்மை களோடு பார்க்கும்போது மக்கு அப்படித் தோன்றுகிறது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/36&oldid=598016" இலிருந்து மீள்விக்கப்பட்டது