பக்கம்:புதிய பார்வை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 39

விட உயர்ந்த சாதன மார்க்கம் இந்த நாட்டுமக்கள் கருத் திலில்லை என்பதை உணர்ந்த பாரதி லெளகிக மனித இயக்கங்களாகிய சுதந்திர இயக்கம், சுதந்திர எழுச்சி, ஆகியவற்றைக் கூடச் சுதந்திர தேவி வழிபாடு, பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி ஆகிய பெயர்களில் பாடித் தேசிய உணர்வையே புதிய தெய்வீக உணர்வாகக் காட்டி விடுகிருன். இது ஒர் அற்புதமான கவிதா சக்தி. பாரத மாதா, பாரதமாதா நவரத்தின மாலை, பாரத தேவியின் திருத்தசாங்கம் ஆகிய எல்லாக் கவிதைகளிலும் தேசபக்தி தெய்வ பக்திக்கு இணேயாக உயர்த்தப்படுகிறது. கவிஞன் செய்கிற புரட்சி என்பதே இதுதான். இயக்கங்களைக்கூட வழிபாடுகளாக மாற்ற முடிகிற கவிதை எவ்வளவு பெரிய புரட்சிக் கவிதையாக இருக்கவேண்டும். தேசியப் பெருமை களாகப் பாரதி எவற்றைக் கொண்டாடுகிருன் ?

"முன்னே இலங்கை அரக்கர் அழிய

முடித்தவில் யாருடை வில்-எங்கள்

அன்னே பயங்கரி பாரத தேவிகல்

ஆரிய ராணியின் வில்

இந்திர சித்தன் இரண்டு துண்டாக

எடுத்த வில் யாருடைவில்-எங்கள்

மங்திரத் தெய்வதம் பாரத ராணி

வயிரவி தன்னுடைய வில்

ஒன்றுபரம்பொருள் நாம் அதன் மக்கள்

உலகின்பக் கேணி என்றே-மிக

கன்று பல்வேதம் வரைந்தகை பாரத

நாயகி தன் திருக்கை.

சகுந்தலை பெற்றதோர் பிள்ளே சிங்கத்தினைத்

தட்டி விளையாடி-நன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/41&oldid=598026" இலிருந்து மீள்விக்கப்பட்டது