பக்கம்:புதிய பார்வை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

புதிய பார்வை

உகந்ததோர் பிள்ளேமுன் பாரத ராணி

ஒளியுறப் பெற்ற பிள்ளே

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது

கல்லொத்த தோள் எவர் தோள் ?-எம்மை.

ஆண்டருள் செய்பவள், பெற்று வளர்ப்பவள்

ஆரிய தேவியின் தோள் -

சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்

தங்தது எவர் கொடைக்கை?-சுவைப்

பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்

பாரத ராணியின் கை.

போர்க் களத்தே பரஞான மெய்க்கீதை

புகன்றது எவருடை வாய்-பகை

தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத

தேவி மலர்த்திருவாய்

தங்தை இனிதுறத் தான் அரசாட்சியும் தையலார் தம்முறவும்-இனி

இந்த உலகில் விரும்புகிலேன் என்றது

எம் அனைசெய்த உள்ளம்

அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்

அன்பினிற் போகும் என்றே-இங்கு

முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்

மொழிஎங்கள் அன்னை மொழி

மிதிலே எரிந்திட வேதப் பொருளே

வினவும் சனகன்மதி-தன்

மதியினிற் கொண்டதை கின்றுமுடிப்பது,

வல்ல கம் அன்னே மதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/42&oldid=598028" இலிருந்து மீள்விக்கப்பட்டது