பக்கம்:புதிய பார்வை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புதிய பார்வை

நேர்படப் பேசு நுனியளவு செல் பணத்தினைப் பெருக்கு புதியன விரும்பு ராஜஸம் பயில் ரெளத்திரம் பழகு வெடிப்புறப் பேசு

போன்றவை கருத்துப் புதுமையோடு புதுமையான அபிப் சாயங்களும் ஆகும்.

இனி, பிரபந்தம், காவிய அமைப்பு ஆகியவற்றில் அவர் செய்த புதுமைகளே, கண்ணன் பாட்டு, குயில், பாஞ்சாலி சபதம் ஆகியவை. பழைய பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத் தையே புதிய அளவில் அவர் மாற்றி அமைத்த அமைப்புத் தான் கண்ணன் பாட்டு. பிள்ளைத் தமிழில் காப்பு, தால், சப்பாணி, வருகை, அம்புலி முதலிய பத்துப் பருவங்கள் தான் உண்டு. இந்தக் கண்ணன் பாட்டு என்ற பாரதியின் புதுமைப் பிள்ளைத் தமிழிலோ பல பருவங்கள் உண்டு. கண்ணன் என் அடிமை, கண்ணன் என் ஆண்டான், கண்ணன் என் வேலைக்காரன், கண்ணம்மா என் காதலி, கண்ணம்மா என் குழந்தை என்று புரட்சிகரமான பருவங்கள் கூட உண்டு. ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல் என்ற கட்டுப்பாடும் இல்லை. - -

குயிலே ஒரு புதுமையான பிரபந்தம். பாஞ்சாலி சபதத்தில் காவிய அமைப்பு முறை புதுமையாக வாய்த் திருக்கிறது. மகாபாரதத்தின் மையமான கருத்தைப் பாஞ்சாலியின் குளுரைக்கு முக்கியத்துவமளித்து மையமாக வைத்துக் காவியம் இயற்றுகிருன் பாரதி. இந்த அமைப்பு மிகமிகச் சுருங்கிய காவிய லட்சணமாக வாய்க்கிறது. கெளரவர் வசம் சிக்கிய பாஞ்சாலியைப் பற்றிக் கொதித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/44&oldid=598032" இலிருந்து மீள்விக்கப்பட்டது